5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
ஜீப்ரா படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் ..!

“ஜீப்ரா” படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் ..!

barath-murugan
Barath Murugan | Published: 05 Nov 2024 16:15 PM

Teri Meri Lyrical Song : தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தெலுங்கு திரைப்படமான "ஜீப்ரா" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். டோலிவுட் இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சத்ய தேவ் என்பவர் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனம் ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

தெலுங்கு பிரபல இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் மற்றும் ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் , பத்மஜா பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜீப்ரா. பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் முன்னணி நடிப்பில் நடிகை பிரியா பவானி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த பிரியா இந்த திரைப்படத்தின் மூலமாக தற்போது தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் சத்யராஜ், தனஜெயா, அம்ருதா அய்யங்கார் மற்றும் சுனில் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். முற்றிலும் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகிவரும் இத்திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு என 4 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த ஜீப்ரா திரைப்படத்திற்காக பிப்ல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திலிருந்து “தெரி மேரி” என்ற லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படமானது வருகின்ற நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது.