5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
நயன்தாராவின் பேயொண்ட் தி ஃபரி டைல் டிரைலர் வெளியாகியது..!

நயன்தாராவின் பேயொண்ட் தி ஃபரி டைல் டிரைலர் வெளியாகியது..!

barath-murugan
Barath Murugan | Updated On: 15 Nov 2024 09:24 AM

Nayanthara's Beyond the Fairy Tale Trailer : தமிழ் பிரபல நடிகைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. மலையாளம் திரைப்படங்கள் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாத நடிகையாக இருந்துவருகிறார். சுமார் 75 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தமிழ்த் திரைப்படங்களில் 2005ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தற்போது பான் இந்திய நடிகையாக இருந்து வருகிறார். முதல் முதலில் மலையாள திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினாலும் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருந்துவருகிறார்.  இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனைப் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வாடகைத் தாய் மூலம் தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் நடிகை நயன்தாராவின் சொந்த வாழ்க்கை குறித்தும், சினிமா வாழ்க்கை குறித்தும் மற்றும் இவர்களின் திருமணத்தைக் குறித்தும் ஆவணப்படம் வெளியாக உள்ளது. இந்த ஆவணப்படத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. இந்நிலையில் இன்று  Nayanthara: Beyond the Fairy Tale என்ற பெயரில் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படமானது வருகின்ற நவம்பர் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Published on: Nov 09, 2024 03:06 PM