நடிகை கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டீசர் இதோ..!
Revolver Rita : இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. இத்திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனம் "பேஷன் ஸ்டுடியோ" தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இன்று நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரிவால்வர் ரீட்டா : நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ரிவால்வர் ரீட்டா’. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் ராதிகா சரத்குமார், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சுப்பராயன், ஜான் விஜய் என பலரும் நடித்துள்ளனர். இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கும் இப்படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில் இவர் ஏஜென்ட் அல்லது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது போல் மற்றும் தனது பையிலிருந்து துப்பாக்கி எடுத்துச் சுடுவது போல் காட்சிகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஓடிடி இணையதளமான நெட்பிளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த டைட்டில் டீசர் இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க :ஃபேஷன் டிசைனர் டூ சினிமா.. கீர்த்தி சுரேஷ் குறித்த சுவாரஸ்ய விஷயங்கள்!