யோகிபாபு நடிக்கும் “கஜானா” படத்தின் ட்ரெய்லர்!
Gajaana Movie : தமிழ்த் திரைப்படங்களில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் மற்றும் முன்னணி நடிகராகவும் இருந்துவருபவர் யோகி பாபு. இயக்குநர் பிரபாதிஷ் சாம்ஸ் இயக்கத்தில் மற்றும் பஃபோர் ஸ்குயர் ஸ்டுடியோவின் தயாரிப்பிலும் உருவாகிவரும் திரைப்படம் "கஜானா". தற்போது இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
தமிழ்த் திரைப்பட அறிமுக இயக்குநர் பிரபாதிஷ் சாம்ஸ் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, வேதிகா மற்றும் இனிகோ பிரபாகரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரமாக நடித்துவரும் திரைப்படம் கஜானா. பிரபல தயாரிப்பு நிறுவனமான பஃபோர் ஸ்குயர் ஸ்டுடியோவின் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அச்சு ராஜா மணி இசையமைத்துள்ளார். வனப்பகுதிகளில் நடக்கும் த்ரில்லர் மற்றும் பழைமை கதையான நாக மணி போன்ற மாறுபட்ட கதைகளுடன் இந்தத்திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் துணை நடிகர்களான சாந்தினி, ஹரிஷ் பெராடி, பிரதாப் போத்தன், மொட்டை ராஜேந்திரன், சென்ட்ராயன், விஜி, வேலு பிரபாகரன், ராஜேஷ், தேவா மற்றும் பூஜா எனப் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
அமானுஷ்யம் மற்றும் புதையல்களைத் தேடும் கதைகளுடன் இந்த திரைப்படமானது வருகின்ற டிசம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட வேலையில் இருந்துவரும் நிலையில் கஜானா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க :ஒருபோதும் இந்தி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்.. நடிகர் அல்லு அர்ஜுன் ஓப்பன் டாக்..