5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“வில்லனா.? இல்ல வில்லி” யோகிபாபுவின் மிஸ் மேகி படத்தின் டீசர் இதோ!

Miss Maggie Movie Teaser : நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் யோகிபாபு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் நடிகை ஆத்மீகா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான் "மிஸ் மேகி". இத்திரைப்படத்தை லதா ஆர்.மணியரசு இயக்கத்திலும் டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளராக கார்த்திக் இசையமைத்துள்ளார். நடிகர் யோகிபாபுவின் மாறுபட்ட நடிப்பில் இத்திரைப்படம் உருவாகிவரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 28 Sep 2024 19:06 PM

மிஸ் மேகி : இயக்குநர் லதா ஆர். மணியரசன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தான் “மிஸ் மேகி”. நடிகர் யோகிபாபுவின் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகிவருகிறது. இப்படத்தில் யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தாலும் இதில் “மெகந்தி சர்க்கஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஆத்மீகா நடித்துள்ளார். இப்படத்தில் காமெடி, ஆக்ஷ்ன் மற்றும் காதல் கட்சிகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கி வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு பெண் வேடத்தில் நடித்துள்ளதால் இப்படத்தில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்ற நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றனர்.

 

Latest Stories