5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் அப்டேட்.. மோஷன் வீடியோ ரிலீஸ்!

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் அப்டேட்.. மோஷன் வீடியோ ரிலீஸ்!

barath-murugan
Barath Murugan | Published: 29 Nov 2024 20:58 PM

Jason Sanjay: தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது திரைப்படங்களைத் தாண்டி முழுநேர அரசியலில் இறங்கிய நிலையில், இவரின் மகன் ஜெய்சன் சஞ்சய் திரைப்பட இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தவெக கட்சித் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் திரைப்படம் இயக்கவுள்ளார் என்ற தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில் இவர் இயங்கும் திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க உள்ளார் என்ற அதிகாரப் பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. தனது முதல் திரைப்படத்தில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கின்ற நிலையில் அதிரடியான கதைக்களத்துடன் உருவாக்க உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சயின் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாக்க இருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரமாக நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க இருப்பதாகவும் மற்றும் இப்படத்தில் பல முக்கிய நடிகர்களும் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் தற்போது வெளியான மோஷன் போஸ்டர் விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதையும் படிங்க :சூர்யா 44 திரைப்படத்திற்கு வந்த டைட்டில் பிரச்சனை..?