5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Poruthadhu Podhum : பொறுத்தது போதும் விடுதலை-2 லிரிக்கல் பாடல் இதோ..!

Poruthadhu Podhum : “பொறுத்தது போதும்” விடுதலை-2 லிரிக்கல் பாடல் இதோ..!

barath-murugan
Barath Murugan | Published: 29 Nov 2024 15:13 PM

Poruthadhu Podhum : வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை 2. கடந்த 2022ம் ஆண்டு வெளியான விடுதலை பாகம் 1ன் தொடர்ச்சியான கதைகளுடன் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது.

இயக்குனர் வெற்றி மாறனின் டைரக்ஷனில், நடிகர் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை  2ஆம் பாகம் உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், வித்தியாசமான கதைகளை இயக்கி வெற்றி திரைப்படங்களை கொடுத்து பிரபலமானவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு சூரி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் ஆக்ஷ்ன் மற்றும் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் வெளியான திரைப்படம் விடுதலை. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சூரி , விஜய் சேதுபதி , கௌதம் வாசுதேவ் மேனன் , பவானி ஸ்ரீ , ராஜீவ் மேனன் , இளவரசு , பாலாஜி சக்திவேல் , சரவண சுப்பையா மற்றும் சேத்தன் பலரும் நடித்துள்ளனர். ஆக்ஷன் கதைக்களத்துடன் வெளியாகத் தயாராகியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் தற்போது இப்படத்திலிருந்து “பொறுத்தது போதும்” என்ற லிரிக்கல் பாடல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:47 வயதில் திருமணம்.. குடும்ப வாழ்க்கையில் இணைந்த போக்கிரி பட நடிகர்..!