விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோ இதோ
Hitler - Sneak Peek | இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட்லர்’ படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிக்கும் படம் ‘ஹிட்லர்’. இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். விவேக் – மெர்வின் இசையமைக்கும் இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.