”மானமும் அறிவும் தான் மனுசனுக்கு அழகு”… விமலின் ‘சார்’ பட ட்ரெய்லர் இதோ!
SIR - Official Trailer | நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சார்’. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் முன்னதாக வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது.
நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சார்’. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் முன்னதாக வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்தநிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது கல்வி மறுக்கப்படும் மக்களின் கல்விக்காக போராடும் நபராக சரவணனும் விமலும் நடித்துள்ளது தெரிகிறது. தற்போது இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றது.