வைபவ் நடிக்கும் “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” படத்தின் ட்ரெய்லர் இதோ..!
Chennai City Gangsters Trailer : தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் வைபவ், தற்போது இவரின் நடிப்பில் இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கியுள்ள திரைப்படம் "சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்". இத்திரைப்படத்தின் நடிகையாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை பாபி பாலசந்திரன் மற்றும் பி.தி.ஜி. நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது இப்படக்குழு இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ட்ரெய்லர் : தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கத்தில் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் தயாரிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்”. இத்திரைப்படத்தில் நடிகர் வைபவ் மற்றும் அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், சுனில் ரெட்டி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் ஜான் விஜய் உட்பட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் வங்கிக் கொள்ளையடித்து அந்த திருட்டிலிருந்து எவ்வாறு தப்பிக்கிறார்கள் என்ற கதையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ளதாக ட்ரெய்லர் மூலம் தெரிகிறது. இந்தப் படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை இப்படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க :நடிகர் கவினின் “ப்ளடி பெக்கர்” பீக் வீடியோ இதோ..!