5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
நடிகர் உன்னி முகுந்தனின் மார்கோ திரைப்படத்தின் டீசர்!

நடிகர் உன்னி முகுந்தனின் “மார்கோ” திரைப்படத்தின் டீசர்!

barath-murugan
Barath Murugan | Published: 11 Nov 2024 20:25 PM

Marco Movie Teaser :மலையாள பிரபல நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். மலையாள இயக்குநர் ஹனீப் அடோனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூ இசையமைத்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக ஆக்ஷன் மற்றும் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாள பிரபல இயக்குநர் ஹனீப் அடோனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மார்கோ. மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இத திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தாரித்துவருகிறது. தமிழ், மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூ இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை உன்னி முகுந்தனுடன் யுக்தி தரேஜா, அன்சன் பால் , சித்திக் , ஜெகதீஷ் , ரியாஸ் கான் , ஜினு ஜோசப் , ஸ்ரீஜித் ரவி என பலரும் நடித்துள்ளனர். 2019ம் ஆண்டு வெளியான “மைக்கில்” என்ற திரைப்படத்தின் ஸ்பின்ஆஃப் திரைப்படமான இது வருகின்ற டிசம்பர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து டீசரை படக்குழு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க :‘கங்குவா’ படம் புக்கிங் எப்படி இருக்கு? இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?