மாஸாக வெளியானது சூர்யாவின் ‘கங்குவா’ பட ரிலீஸ் ட்ரெய்லர்!
Kanguva - Release Trailer | மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்திலிருந்து வெளியானது ரிலீஸ் ட்ரெய்லர் வீடியோ. சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கங்குவா படம் வருகின்ற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
Latest Videos