‘அமரன்’ படத்திலிருந்து “வெண்ணிலவு சாரல்” பாடல்!
Vennilavu Saaral Lyrical Song : நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அமரன். இத்திரைப்படத்தை இயக்குநர் ராஜ் குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வெண்ணிலவு சாரல் : பிரபல இயக்குநர் ராஜ்குமார் இயக்கத்தில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிவரும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி என இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அமரன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது படத்தின் பிரமோஷன் வேலைகள் நடந்துவருகிறது. இந்நிலையில் படக்குழு அடுத்த லிரிக்கல் பாடல் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். “வெண்ணிலவு சாரல்” என்ற இந்த லிரிக்கல் பாடலை கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் என இரு பாடகர்களும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க :Cinema Rewind: “மார்வெல்ஸ் படம் போலதான் பிளான்” இயக்குநர் ஷங்கர் சொன்ன விஷயம்