‘அமரன்’ படத்திலிருந்து வெளியான “போர் வீரன்” லிரிக்கல் பாடல்!
Por Veeran : இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். பிரபல நடிகர் உலகநாயகன் கமலின் ராஜ்கமல் பிளம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில் தற்போது அடுத்த பாடலை வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் அசாதாரணமான நடிப்பில் பயோ கிராபிக் மற்றும் ஆக்ஷ்ன் நிறைந்து வெளியான திரைப்படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு வெளியாகிய இந்த திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கே டப் கொடுக்கும் விதத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் மக்களை ஈர்த்து வருகிறார். அமரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் சுமார் 42.6 கோடிகளை வசூல் செய்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு “பிளாக் பஸ்டர் ஹிட்” திரைப்படமாக அமைத்துள்ளது.
வெளியானது முதல் அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த அமரன் தெலுங்கில் விஜய்யின் கோட் திரைப்படத்தின் வசூலை பீட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்காகப் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் வெளியான அனைத்துப் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடலான “போர் வீரன்” என்ற லிரிக்கல் பாடலை வெளியிட்டுள்ளது.