சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் முதல் பாடல் வெளியானது!
Hey Minnale Lyrical Song : ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோ திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழில் தற்போது விஜய்க்கு அடுத்ததாக நடிப்பில் கருதப்படுபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் மற்றும் நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அமரன். இத்திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் “ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷன் மற்றும் சோனி பிக்சர்” இணைந்து உருவாக்கி வருகிறது. இந்த திரைப்படத்தின் கதைக்களமானது மறைந்த ராணுவ வீரரான “மேஜர் முகுந்த் வரதராஜனின்” ராணுவ வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாகிவரும் திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்திலிருந்து கடந்த செப்டம்பர் 27ல் நடிகை சாய் பல்லவியின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோவில் மேஜர் முகுந்தின் காதலி “இந்து ரெபேக்கா வர்கீஸ்” என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் “ஹேய் மின்னலே” என்ற லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பிரபல பாடகர்கள் ஹரிசரண் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இந்த பாடலானது இணையத்தில் ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க : கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்