5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
நடிகர் சித்தார்த்தின் மிஸ் யூ திரைப்படத்தின் டீசர் இதோ..!

நடிகர் சித்தார்த்தின் “மிஸ் யூ” திரைப்படத்தின் டீசர் இதோ..!

barath-murugan
Barath Murugan | Published: 12 Nov 2024 12:33 PM

Miss You Movie Teaser :தமிழ் நடிகர்களில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்தார்த். தற்போது இவரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான் "மிஸ் யூ". இயக்குநர் என். ராஜசேகர் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மற்றும் 7 மில்ஸ் பேர் சேகென்ட் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த திரைப்படமானது வருகின்ற நவம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட இயக்குநர் என். ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை ஆஷிகா ரங்கநாத் இணைந்து நடிக்கும் திரைப்படம் “மிஸ் யூ”. இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாள ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான ‘சித்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்தவர் நடிகர் சித்தார்த். இவரின் முன்னணி நடிப்பில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மற்றும் 7 மில்ஸ் பேர் சேகென்ட் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தத்திரைப்படம் முதலில் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் வெளியீட்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க :‘கங்குவா’ படம் புக்கிங் எப்படி இருக்கு? இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?