5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகர் ராம் சரணின் “ரா மச்சா மச்சா” பாடலின் லிரிக்கல் வீடியோ!

Game Changer : தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு மொழியை மையமாகக் கொண்டு உருவாகிவரும் திரைப்படம் "கேம் செஞ்சேர்". இந்த திரைப்படமானது தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் கதாநாயகனாக ராம் சரண் மற்றும் கதாநாயகியாக கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி நடித்துள்ளனர்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 01 Oct 2024 16:49 PM

 “RC15” என்று அழைக்கப்பட்ட நடிகர் ராம் சரணின் 15வது படமான இந்த கேம் செஞ்சேர் என்ற திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கும் நிலையில் தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பார்வை கடந்த 2021ல் வெளியான நிலையில் தற்போது இந்தத் திரைப்படமானது வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான ராம் சரண், அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, ஸ்ரீ காந்த், ஜெயராம், சுனில், சமுத்திரக்கனி மற்றும் நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அரசியல் மற்றும் ஆக்ஷ்ன் நிறைந்த கதைக்களத்தைக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் லிரிக்கல் பாடலான “ரா மச்சா மச்சா” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Also Read : மெய்யழகன்’ படத்தில் நடிக்க ஸ்ரீதிவ்யா வாங்கிய சம்பளம்.. வெளியான தகவல்!

Latest Stories