5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“என்கிட்ட இருந்து அவன யாராலயும் காப்பாத்த முடியாது” – வெளியானது ரஜினியின் வேட்டையன் டிரெய்லர்..

Vettaiyan Trailer நடிகர் ரஜினி மற்றும் பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வேட்டையன். இத்திரைப்படட்டமானது வருகின்ற அக்டோபர் 10ல் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படக்குழு வேட்டையன் திரைப்படத்தின் "ட்ரெய்லரை" இணையத்தில் வெளியிட்டுள்ளது..!

barath-murugantv9-com
Barath Murugan | Published: 02 Oct 2024 18:10 PM

வேட்டையன் ட்ரெய்லர் : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் மற்றும் லைகா நிறுவனம் தயாரிப்பில்  “வேட்டையன்” படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்படப் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைப்படத்தின் ட்ரெய்லரானது அக்டோபர் 2ல் வெளியாகும் என நேற்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது “வேட்டையன்” திரைப்படத்தின் “ட்ரெய்லர்” இணையத்தில் வெளியாகியுள்ளது.  இளம் பெண்கள் படுகொலைக்கு எதிராகவும், போலீஸ் என்கவுண்டர் போன்ற ஆக்ஷ்ன் கதைக்களத்தை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது என இந்த ட்ரெய்லர் மூலமாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த வேட்டையன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக தற்போது இணையத்தின் மாஸ் காட்டிவருகிறது.

Follow Us
Latest Stories