5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரதீப் ரங்கநாதனின் LIK படத்திலிருந்து முதல் பாடல்!

Love Insurance Kompany : தமிழ் திரைப்பட பிரபல இயக்குநராக வலம்வருபவர் விக்னேஷ் சிவன் தற்போது இவரின் இயக்கத்தில் பிரபல நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கீர்த்தி செட்டி இணைந்து நடிக்கும் திரைப்படம் "லவ் இன்சுரன்ஸ் கம்பனி". இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். தற்போது இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் "தீமா" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 16 Oct 2024 15:53 PM

தமிழ் சினிமாவில் கோமாளி மற்றும் லவ் டுடே போன்ற திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பிலும் நடித்துவரும் திரைப்படம் “லவ் இன்சுரன்ஸ் கம்பனி”. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக எஸ் ஜே சூர்யா, கிருத்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான், கௌரி கிஷன், ஷா ரா போன்ற பல பிரபலங்கள் நடித்துவருகின்றனர். இந்த திரைப்படம் காதல் மற்றும் காலப்பயணம் போன்ற கதையைக் கொண்டு உருவாகிவருகிறதாம்.

இந்த LIK திரைப்படத்தில் கீர்த்தி செட்டி மற்றும் எஸ்.ஜெ. சூர்யா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இசையமைப்பாளர் அனிருத்தின் இசையமைப்பிலிருந்து “தீமா” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்நிலையில் தீமா பாடல் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

இதையும் படிங்க :‘வேட்டையன்’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தகவல்!

Latest Stories