நாட்டின் அமைதியை குலைப்பேன் என்று உறுதியளிக்கிறேன் – நகுலின் ’வாஸ்கோடகாமா’ பட ட்ரெய்லர் இதோ!
VascoDaGama Official Trailer | தற்போது நகுல் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாஸ்கோடகாமா. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்ஜிகே இயக்கி உள்ளார். இதில் நகுல் உடன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நகுல் நடிப்பில் உருவாகியுள்ள ’வாஸ்கோடகாமா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் திரைப்படமான ‘பாய்ஸ்’ படத்தில் ஐந்து புதுமுகங்களில் ஒருவராக அறிமுகம் ஆனவர் நடிகர் நகுல். பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகம் ஆன போது, கொழு கொழு இளைஞராக இருந்த நடிகர் நகுல், அடுத்தடுத்த படங்களில் எடை குறைத்து, ஃபிட்டாக்கி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தில், கதாநாயகனான நடிகை சுனைனாவுடன் நடித்த நகுல், ‘நாக்க மூக்க’ பாடல் மூலம் பெரிய புகழ் பெற்றார். அதன் பிறகு வெளியான திரைப்படங்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றன. நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம், நாரதன் ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது நகுல் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாஸ்கோடகாமா. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்ஜிகே இயக்கி உள்ளார். இதில் நகுல் உடன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.