5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஒரு மாசத்துக்கு மேல் ஒரு பொண்ணோட அவன் இருக்க மாட்டான் – ‘காதலே காதலே’ டீசர்..!

Kadhale Kadhale - Official Teaser | இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். படத்தில் மஹத்திற்கு ஜோடியாக  மீனாட்சி கோவிந்த ராஜன் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கனேஷ், ரவீனா ரவி உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீவாரி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Sep 2024 16:59 PM

பிக் பாஸ் மகத் நடித்த “காதலே காதலே” என்ற படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பரிட்சையமானவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. இதனைத் தொடர்ந்து பிக் பாஸ்  சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். தொடர்ந்து  ஜில்லா, 600028  பாகம் 2, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து  2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் XL இந்தி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்பொழுது மகத் ‘காதலே காதலே’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். படத்தில் மஹத்திற்கு ஜோடியாக  மீனாட்சி கோவிந்த ராஜன் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கனேஷ், ரவீனா ரவி உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீவாரி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest Stories