‘மெய்யழகன்’ படத்திலிருந்து “அருள் மெய்” லிரிக்கல் பாடல் இதோ..!
Arul Mei Lyrical Song : நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் "2டி என்டேர்டைமென்ட்" தயாரிப்பிலும் இயக்குநர் சி.பிரேம்குமார் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் நடிகர் கார்த்திக், அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ல் வெளியாகியது. தற்போது இந்த படத்திலிருந்து "அருள் மெய்" என்ற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.
96 படம் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சி.பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்திக், ஸ்ரீ திவ்யா, அரவிந்த் சாமி மற்றும் ராஜ்கிரண் போன்றவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் மெய்யழகன். வசூல் வேட்டையில் சுமார் பல கோடிகளை வசூல் செய்த இத்திரைப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஏற்கெனவே “யாரோ இவன் மற்றும் டெல்டா கல்யாணம்” என இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியான நிலையில் மூன்றாவது பாடலாக “அருள் மெய்” லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா சிறப்பாக பாடியுள்ளார். தற்போது இந்த பாடலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்? பிக்பாஸ் பிரபலம்தான் மாப்பிள்ளையா