5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
தக் லைஃப் படத்தின் டீசர் எப்படி இருக்கு? ரிலீஸ் தேதி வெளியீடு!

“தக் லைஃப்” படத்தின் டீசர் எப்படி இருக்கு? ரிலீஸ் தேதி வெளியீடு!

barath-murugan
Barath Murugan | Published: 07 Nov 2024 15:23 PM

Thug Life Release Date : தமிழ் பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் "தக் லைஃப்". உலகநாயகன் கமல்ஹாசன் முன்னணி கதாநாயகனாக நடித்துவரும் இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து தயாரித்து வருகிறது. தற்போது மிகப் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் மிக பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வருவது “தக் லைஃப்”. இத்திரைப்படத்தில் உலகநாயகன் கமலுடன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன் அலி ஃபசல் எனப் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் முதல் ஆரம்பித்த பின் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடித்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. 2025ல் வெளியாகும் என முன்னரே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று உலகநாயக கமலின் பிறந்த நாளை முன்னிட்டு “தக் லைப்” படத்தில் ரிலீஸ் தேதி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகி வருவதாக காண்பவரை மிரட்டும் வகையில் இருக்கும் “தக் லைஃப்” 2025ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.