5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’தேவரா’ திரைப்படத்தின் அடுத்த ட்ரெய்லர்.. எகிறும் எதிர்பார்ப்பு!

Devara Release Trailer : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் "தேவரா பாகம் 1" . இத்திரைப்படத்தைத் தெலுங்கு இயக்குநர் கொரடலா சிவா இயக்க, யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் சைஃப் அலிகான் மற்றும் ஜான்வி கபூர் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 23 Sep 2024 21:38 PM

தேவரா பாகம் 1 : டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தற்போது இவரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் “தேவரா பாகம் 1”. இப்படத்தில் என்.டி.ராமராவ் ஜூனியர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், இவர்களுடன் சைஃப் அலிகான் மற்றும் ஜான்வி கபூர் அவர்களின் முதல் தெலுங்கு படத்தில் நடித்துள்ளனர். ஸ்ருதி மராத்தே, பிரகாஷ் ராஜ், ஸ்ரீ காந்த், ஷைன் டாம் சாக்கோ, நரேன், கலையரசன் மற்றும் முரளி ஷர்மா ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தைத் தெலுங்கு இயக்குநரான கொரடலா சிவா இயக்கியுள்ளார். இப்படத்தை யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படமானது தமிழ் ,ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் முதல் ட்ரெய்லரானது கடந்த செப்டம்பர் 11ல் வெளியான நிலையில் பல சர்ச்சைக்கு ஆளானது. இப்படமானது வருகின்ற செப்டம்பர் 27ல் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்காக 2வது ட்ரெய்லரை இப்படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Also Read : தஞ்சாவூர் காட்சிகள்.. வெளியானது ‘மெய்யழகன்’ படத்தின் “ட்ரெய்லர்”!

Latest Stories