5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நல்லா சாப்டனும்… நல்லா தூங்கனும்… மனசுல பட்டத பேசனும் – கவனம் பெறும் ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட டீசர்

Brother - Teaser | இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர்த்து, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, ‘கேஜிஎஃப்’ புகழ் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 21 Sep 2024 18:21 PM

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சைரன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பிரதர்’. இந்தப் படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர்த்து, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, ‘கேஜிஎஃப்’ புகழ் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. ‘பிரதர்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ‘பிரதர்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றது.

Follow Us
Latest Stories