துருவா சர்ஜாவின் ‘மார்டின்’ பட ட்ரெய்லர் இதோ!
#Martin - New Movie Trailer 1 [4K Video] | பிரின்ஸ் துருவா சர்ஜா நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்குகிறார். பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்'. ஆக்சன் திரைப்படமாக உருவான இது வருகிற அக்டோபர் 11-ம் தேதி இந்திய மொழிகள் மட்டுமல்லாது கொரியன், ஜப்பான், ஸ்பானிஷ் மற்றும் ரஷிய மொழிகளிலும் நேரடியாக வெளியாகிறது.
நடிகர் துருவா சார்ஜாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்டின்’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய்மேத்தா புரொடக்ஷன் நிறுவனங்களின் சார்பில், உதய் மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா ஆகியோர் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட திரையுலகில் தயாரிக்கும் படம் ‘மார்ட்டின்’. பிரின்ஸ் துருவா சர்ஜா நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்குகிறார். பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மார்டின்’. ஆக்சன் திரைப்படமாக உருவான இது வருகிற அக்டோபர் 11-ம் தேதி இந்திய மொழிகள் மட்டுமல்லாது கொரியன், ஜப்பான், ஸ்பானிஷ் மற்றும் ரஷிய மொழிகளிலும் நேரடியாக வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கேஜிஎஃப், காந்தாரா படங்களைத் தொடர்ந்து கன்னட சினிமா இந்திய அளவில் கவனம் பெற்று வரும் நிலையில், அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள மார்ட்டின் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.