5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘தாண்டகாரண்யம்’ படத்திலிருந்து வெளியான முதல் பாடல்!

Adiye Alangaari : நடிகர் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் ஆகிய இவர்களின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தாண்டகாரண்யம். இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு என்ற திரைப்படத்தை இயக்கிய பிரபலமான இயக்குநர் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனம் நீலம் புரொடக்ஷனில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 25 Oct 2024 09:26 AM

அடியே அலங்காரி : தமிழ் பிரபல நடிகர்கள் கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தாண்டகாரண்யம். இத்திரைப்படத்தில் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் கல்லறைகள், முத்துக்குமார், அருள்தாஸ், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பால சரவணன் எனப் பலரும் நடித்துள்ளனர். பா  ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த திரைப்படத்தில் முதல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இதனைத் தொடர்ந்து தற்போது முதல் பாடலை வெளியிட்டுள்ளது “அடியே அலங்காரி” என்ற பாடலை இசையமைப்பாளர் ஜஸ்டின் இசையமைத்து இருக்கிறார். கிராமம் மற்றும் காடுகள் சார்ந்த கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படமானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :25 நாட்கள்.. மெய்யழகன் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Latest Stories