Demonte Colony 2: டிமான்டி காலனி 2ல் இருந்து “மிருகன்” வீடியோ பாடல் இதோ..!
Mirugan Video Song : தமிழ் சினிமாவில் திரில்லர் திரைப்படங்கள் என்றாலே மக்கள் விரும்பி பார்ப்பது உண்டு. அந்த வகையில் இயக்குநர் அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமாண்டி காலணி பாகம் 2. இந்த திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் மற்றும் ஆண்டி ஜாஸ்கெலைனன் நடிப்பில் உருவாக்கிய திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாம் சி. இசையமைத்துள்ளார். தற்போது இவரின் இசையமைப்பில் "மிருகன் " என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
மிருகன் வீடியோ பாடல் : நடிகர் அருள்நிதி மற்றும் நடிகை பிரியா பவானி சங்கரின் நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் டிமான்டி காலனி பாகம் 2. இந்த திரைப்படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை பாபி பாலச்சந்திரன், விஜய சுப்ரமணியன் மற்றும் ஆர்.சி.ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இந்த திரைப்படமானது கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது. இத்திரைப்படம் சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் 85 கோடிகளுக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது. தற்போது இசையமைப்பாளர் சாம் சி. இசையமைப்பில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியான நிலையில் இப்போது “மிருகன் ” என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க :வைபவ் நடிக்கும் “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” படத்தின் ட்ரெய்லர் இதோ..!