5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
அல்லு அர்ஜூனின் அனல் பறக்கும் ’புஷ்பா 2’ ட்ரெய்லர் இதோ!

அல்லு அர்ஜூனின் அனல் பறக்கும் ’புஷ்பா 2’ ட்ரெய்லர் இதோ!

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Nov 2024 19:17 PM

Pushpa 2-The Rule (Tamil) | முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது. இந்த நிலையில் படம் வருகின்ற டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் கூலி தொழிலாளியாக இருந்த அல்லூ அர்ஜூன் இரண்டாம் பாகத்தில் பெரிய கடத்தல் மன்னனாக காட்சியளிக்கிறார்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கும் புஷ்பா கதாபாத்திரம் எப்படி ஒரு கடத்தல் கும்பல் தலைவனாகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது. இந்த நிலையில் படம் வருகின்ற டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் கூலி தொழிலாளியாக இருந்த அல்லூ அர்ஜூன் இரண்டாம் பாகத்தில் பெரிய கடத்தல் மன்னனாக காட்சியளிக்கிறார். அனல் பறக்கும் காட்சிகளுடன் வெளியான இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.