5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
”எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு”... அஜித்தின் விடாமுயற்சி டீசர் இதோ

”எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு”… அஜித்தின் விடாமுயற்சி டீசர் இதோ

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Nov 2024 23:25 PM

Vidaamuyarchi Teaser | இந்த படத்தில் நடிக்கும் போது நடிகர் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் உடன் குட் பேட் அக்லி படத்திலும் இணைந்தார். அந்த படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான நிலையில் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வந்தது. ரசிகர்களின் வேதனையை புரிந்துகொண்ட படக்குழு தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் துணிவு படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் ’விடாமுயற்சி’. இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள நிலையில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். இதில் அஜித் உடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பணிகள் முடிவடையாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இந்த படத்தில் நடிக்கும் போது நடிகர் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் உடன் குட் பேட் அக்லி படத்திலும் இணைந்தார். அந்த படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான நிலையில் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வந்தது. ரசிகர்களின் வேதனையை புரிந்துகொண்ட படக்குழு தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. அதில் ”எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் படம் வருகின்ற 2025-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என்றும் அந்த டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.