Viral Video : இடுப்பளவு தண்ணீர்.. சலிக்காமல் நடந்துச் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
Zomato | உணவு டெலிவரி செய்ய ஸ்விக்கி, சொமேட்டோ, ஓலா ஃபுட்ஸ் உள்ளிட்ட செயளிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் மழை, வெயில் என பார்க்காமல் உரிய நேரத்தில் உணவை கொண்டு சென்று சேர்ப்பதை கடைபிடித்து வருகின்றனர்.
ஆன்லைன் உணவு ஆர்டர் : முன்பெல்லாம் கடைகளுக்கு சென்று நேரம் செலவழித்து வாங்கிய பொருட்களை தற்போது வீட்டில் இருந்தபடியே வெறும் ஒரு கிளிக்கில் வாங்கிவிடலாம். உணவு முதல் உடை, ஆபரணங்கள் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்துக்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக இந்த உணவு ஆன்லைன் ஆர்டரில் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். எப்பொழுதும் வேலை என நிக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த ஆன்லைன் ஆர்டர் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேலை பலு அதிகம் இருந்தாலோ அல்லது ஓய்வெடுக்க விரும்பினாலோ மக்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துக்கொள்கின்றனர். இதற்காகவே ஸ்விக்கி, சொமேட்டோ, ஓலா ஃபுட்ஸ் உள்ளிட்ட செயளிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் மழை, வெயில் என பார்க்காமல் உரிய நேரத்தில் உணவை கொண்டு சென்று சேர்ப்பதை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் இடுப்பு அளவு தண்ணீரில் நடந்து சென்று உணவு டெலிவரி செய்த டெலிவரி பாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க : Viral Video : குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ராட்சத முதலைகள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
இடுப்பளவு தண்ணீரில் நடந்துச் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்
குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழந்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில், இடுப்பளவு தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று உணவு டெலிவரி செய்த சொமேட்டோ ஊழியரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Zomato delivering food in Ahmedabad amidst extremely heavy rains.
I request @deepigoyal to find this hardworking delivery person and appropriately reward him for his dedication and determination. #Zomato #AhmedabadRains #GujaratRains pic.twitter.com/RQ5TsbpTSL
— Neetu Khandelwal (@T_Investor_) August 28, 2024
டெலிவரி ஊழியருக்கு இணையத்தில் குவியும் பாராட்டு
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு குடியிருப்பை சுற்றி கடல் போல மழை நீர் தேங்கியுள்ளது. அந்த வீட்டின் வாசலில் ஒரு சிலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர். அந்த டெலிவரி ஊழியர் இடுப்பளவு இருக்கும் தண்ணீரை பொருட்படுத்தாமல் உணவை பத்திரமாக எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல நடந்துச் சென்று உணவு டெலிவரி செய்யும் வீடியோ காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் அந்த ஊழியரின் கடமையை பாராட்டி பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.