5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : ரயில் தண்டவாளத்தி படுத்து தூங்கிய முதியவர்.. நெருங்கிய ரயில்.. அடுத்து நடந்தது என்ன?

Old Man | தண்டவாளத்தில் முதியவர் படுத்து உறங்கியதன் காரணமாக, ரயில் பாதி வழியிலே நிறுத்தி வைகக்ப்பட்டது. இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் முதியவர் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் போது, ரயில் ஓட்டுநர் இறங்கி வந்து அவரை எழுப்பும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : ரயில் தண்டவாளத்தி படுத்து தூங்கிய முதியவர்.. நெருங்கிய ரயில்.. அடுத்து நடந்தது என்ன?
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Published: 25 Aug 2024 16:57 PM

ரயில் தண்டவாளத்தில் தூங்கிய நபர் : தரையில் செல்லும் வாகனங்களில் மிகவும் வேகமானது ரயிலகள் தான். அதனால் தான் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது, மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும். ஏனென்றால் கண் இமைக்கும் நேரத்தில் விபத்தை ஏற்படுத்த கூடிய ஆபத்தை கொண்டவை ரயில்கள். ரயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும்போதே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்  என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையி ஒருவர் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Crime: மோசமான ஒருதலைக் காதல்.. இளம்பெண் கொடூர கொலை.. கட்டிடத்திற்குள் உடல் புதைப்பு.. பகீர் பின்னணி!

ரயில் தண்டவாளத்தில் குடை விரித்து ஜாலியாக தூங்கிய முதியவர்

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் குடை விரித்து படுத்து தூங்கியுள்ளார். முதியவரை கண்டதும் ரயிலை நிறுத்திய ஓட்டுநர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் முதியவரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர், நடு தண்டவாளத்தில் முதியவர் படுத்து உறங்கியதன் காரணமாக, ரயில் பாதி வழியிலே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் முதியவர் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் போது, ரயில் ஓட்டுநர் இறங்கி வந்து அவரை எழுப்பும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் குடையை விரித்து வைத்துக்கொண்டு தூங்குகிறார். அதனை கண்ட ரயில் ஓட்டுநர் கீழே இறங்கி சென்று அவரை தூக்கத்திக் இருந்து எழுப்புகிறார். பிறகு முதியவர் எழுந்ததும் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து, நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Bus Accident : பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

முதியவரின் இந்த செயலுக்கு கிண்டலாகவும், சமூக பொருப்புடனும் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் முதியவர் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து ரயிலை நிறுத்திய ஓட்டுநருக்கு பாராட்டுகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News