5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Optical Illusion : கூர்மையான பார்வை கொண்டவரா நீங்கள்.. படத்தில் மறைந்திருக்கும் ஆமையை 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Eye Test | ஒளியியல் மாயை என்பது தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது. பொதுவாக ஒளியியல் மாயையில், ஒரே புகைப்படத்தில் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த புகைப்படத்தை உற்று கவனிக்கும் போதுதான் அதில் பல உருவங்கள் அடங்கியுள்ளதை நம்மால் கண்டறிய முடியும்.

Optical Illusion : கூர்மையான பார்வை கொண்டவரா நீங்கள்.. படத்தில் மறைந்திருக்கும் ஆமையை 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
ஒளியியல் மாயை புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 18 Nov 2024 11:40 AM

இணையத்தில் அவ்வப்போது புத்தி கூர்மையை சோதிக்கும் விதமாக ஒளியியல் மாயை புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில், தற்போது கண்களின் கூர்மை தன்மையை அறியும் வகையில், ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த பபடத்தில், அடர்ந்த காட்டில் மறைந்திருக்கும் ஆமையை கண்டுபிடிக்க சவால் விடப்பட்டுள்ளது. மேலும் அந்த படத்தில் மறைந்திருக்கும் ஆமையை வெறும் 5 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உங்களால் அந்த ஆமையை வெறும் 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை சோதித்து பாருங்கள்.

இதையும் படிங்க : Optical Illusion : உங்களுக்கு முதலில் தெரிந்தது எது?.. முதியவரா அல்லது குடையா.. உங்களது பண்புகள் இவைதான்!

ஒளியியல் மாயை புகைப்படங்கள் என்றால் என்ன?

ஒளியியல் மாயை என்பது தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது. பொதுவாக ஒளியியல் மாயையில், ஒரே புகைப்படத்தில் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த புகைப்படத்தை உற்று கவனிக்கும் போதுதான் அதில் பல உருவங்கள் அடங்கியுள்ளதை நம்மால் கண்டறிய முடியும். அவ்வாறு அது ஒளியியல் மாயை புகைப்படம் என தெரியாமல் பார்ப்பவர்களுக்கு முதலில் ஏதேனும் ஒரு உருவம் மட்டுமே தெரியும். இது ஒவ்வொரு மாதிரியான விடையை தரும். அவ்வாறு இந்த ஒளியியல் மாயை புகைப்படங்களை பார்க்கும் ஒவ்வொருவருக்கு ஒரு உருவம் தெரிவதற்கு பின் ஒரு உலவியல் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் மூலம் ஒருவரின் பண்புகளை தெரிந்துக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Personality Test : இளவேனில் முதல் குளிர் காலம் வரை.. உங்களுக்கு பிடித்த காலமே உங்கள் பண்புகளை சொல்லும்!

இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ஆனால் தற்போது வைரலாகி வரும் ஒளியியல் மாயை புகைப்படம் புத்தி கூர்மையை ஆராயும் ஒளியியல் மாயையாக இல்லை. அது, கண்பார்வையை சோதிக்கும் ஒளியியல் மாயை புகைப்படமாக உள்ளது. அந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் ஆமையை கண்டுபிடிக்க சவால் விடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் அடர்ந்த காடு போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அதில் பெரிய, பெரிய மரங்கள், முட்புதர்கள், புற்கள், பூச்செடிகள், கொடிகள் என எங்கு பார்த்தாலும் மிகவும் பசுமையாக காட்சியளிக்கிறது. இந்த புகைப்படத்தில், பச்சை நிற ஆமை ஒளிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதை வெறும் 5 விநாடிக்குள் கண்டுபிடிக்கும் நபர்களின் கண் பார்வை மிகவும் கூர்மையாக இருப்பதாக அர்த்தம் என கூறப்படுள்ளது.

இதையும் படிங்க : Viral Video: உருவானது ஏஐ வழக்கறிஞர்.. வியந்து பார்த்த தலைமை நீதிபதி.. வைரல் வீடியோ!

கண்டுபிடிக்க முடியவில்லையா?

இப்பொழுதும் உங்களால் எந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் மறைந்திருக்கும் ஆமையை கண்டுபிடிக்க முடியவில்லையா. சரி, நாங்களே அதற்கான விடையை சொல்கிறோம். புகைப்படத்தை உற்று கவனியுங்கள். அதில் உயர்ந்த மரங்கள் மற்றும் புதர்கள் நிறைந்திருக்கும். அதில் தரை முழுவதும் புற்கள் நிறைந்திருக்கும். அந்த புற்களை உற்று கவனித்தீர்கள் என்றால் அங்கு ஒரு பாறை இருக்கும். அந்த பாறையின் மேற் பக்கத்தில் கட்டம் கட்டமாக ஒரு வடிவம் இருக்கும். அதுதான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய ஆமை. படத்தில் ஆமை தலை கீழாக இடம்பெற்றிருப்பதால் அதனை கண்டுபிடிக்க சில நேரம் எடுக்கலாம். இருப்பினும் ஒளியியல் மாயை புகைப்படத்தில் மறைந்திருக்கும் ஆமையை நீங்கள் வெறும்  5 விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களின் பார்வை திறன் மிகவும் கூர்மையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News