Viral Video : ரயிலின் அப்பர் பர்த்தில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதறிப்போன பயணிகள்.. அடுத்து நடந்தது என்ன?
Snake in Train | மும்பை நோக்கி சென்றுக்கொண்டிருந்த விரைவு ரயில் ஒன்றில், அப்பர் பர்த்தில் இருந்து பாம்பு ஒன்று எட்டி பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பை கண்டால் படையு நடுங்கும் என்று கூறுவார்கள். அப்படி தான் அந்த ரயில் பெட்டியில் இருந்த மொத்த பயணிகளும் திகைத்துபோய் நின்றுள்ளனர்.
மொபைல் போன் மற்றும் இணைய பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், தினமும் ஏதேனும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஓடும் ரயிலில் அப்பர் பர்த்தில் இருந்து பாம்பு ஒன்று எட்டிப் பார்க்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Bengaluru Murder: ஃபிரிட்ஜில் 50 துண்டுகளாக கிடந்த பெண்.. அதிர்ந்த போலீஸ்.. விசாரணையில் ஷாக்!
விரைவு ரயுலில் பயணித்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்துகளில் முக்கியமான ஒன்று ரயில் போக்குவரத்து. காரணம், ரயிலில் தான் குறைந்த விலையில் மிக நீண்ட தூரம் பயணிக்க முடியும். அதுமட்டுமன்றி ரயில் மிகவும் விரைவான போக்குவரத்து என்பதால் பெரும்பாலான மக்கள் நேர மேலான்மையை கருதி ரயிலில் பயணிக்கின்றனர். இது போன்று ஜபால்பூர் மும்பை கரிபார்த் விரைவும் ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
Snake in train! Snake in AC G17 coach of 12187 Jabalpur-Mumbai Garib Rath Express train. Passengers sent to another coach and G17 locked. pic.twitter.com/VYrtDNgIIY
— Rajendra B. Aklekar (@rajtoday) September 22, 2024
ரயிலின் அப்பர் பர்த்தில் இருந்து எட்டி பார்த்த பாம்பு – வைரல் வீடியோ!
மும்பை நோக்கி சென்றுக்கொண்டிருந்த விரைவு ரயில் ஒன்றில், அப்பர் பர்த்தில் இருந்து பாம்பு ஒன்று எட்டி பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பை கண்டால் படையு நடுங்கும் என்று கூறுவார்கள். அப்படி தான் அந்த ரயில் பெட்டியில் இருந்த மொத்த பயணிகளும் திகைத்துபோய் நின்றுள்ளனர். இந்த காட்சியை அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Supreme Court: சிறை டூ அபராதம்.. சிறார்களின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
பாம்பை கண்டு பதறிப்போன பயணிகள்
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு ரயில் பெட்டியில் சில பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் பயணம் செய்கின்றனர். அப்போது பயணிகள் இடையே சலசலப்பு ஏற்படுகிறது. காரணம் அப்போதுதான் பாம்பு ஒன்று அப்பர் பர்த்தில் இருக்கும் கம்பியில் தொங்கிய படி தலையை வெளியே நீட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிலர், பாம்பு இருக்கும் இடத்தில் இருந்து பயத்தில் தள்ளி செல்கின்றனர். அப்போது சிலர் பாம்பை தொந்தரவு செய்யாதீர்கள், அதை தனியாக விட்டு விடுங்கள் என்று கூறும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வைரல் வீடியோ குறித்து நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் கிண்டலாகவும், பொதுமககளின் நலணை கருத்தில் கொண்டும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இப்படி ஒரு பிரச்னையா?.. குழம்பும் பயனர்கள்!
இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்
சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.