Viral Video : செல்ஃபி மோகம்.. 60 அடி பள்ளத்தில் விழுந்த இளம் பெண்.. அடுத்து நடந்தது என்ன?
Shocking News | இந்த சம்பவம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புனே காவல்துறை, பொரேன் காட் பகுதியில் செல்ஃபி எடுக்க முயற்சித்து 60 அடி பள்ளத்தில் விழுந்த இளம் பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். நஸ் ரீன் குரேஷி என்று அழைக்கப்படும் அந்த பெண், கொட்டும் மழையில், அங்கிருந்த உள்ளூர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டார்.
60 அடி பள்ளத்தில் விழுந்த இளம் பெண் : மஹாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள காட் பகுதியில், 29 வயது இளம் பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் தவறி 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், கயிறு மூலம் இளம் பெண்ணை காப்பாற்றினர். இந்த நிலையில், கயிறு மூலம் இளம் பெண் பள்ளத்தில் இருந்து மேலே அழைத்துவரப்படும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் இளம் பெண் மீட்கப்படும் வீடியோ
இணையத்தில் வைரலாகு அந்த வீடியோவில், மேல் இருந்து தடிமனான கயிறுகளை பள்ளத்தில் இறக்கி மீட்பு குழுவினர் அந்த பெண்ணை மேலே அழைத்து வருகின்றனர். அப்போது வலியால் கதறி துடிக்கும் அந்த பெண்ணை மீட்பு குழுவினர் இணைந்து மேலே இழுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : Shocking News : திருமணம் செய்துக்கொள்ள மறுத்த பெண்.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!
சம்பவம் குறித்து புனே காவல்துறை விளக்கம்
இந்த சம்பவம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புனே காவல்துறை, பொரேன் காட் பகுதியில் செல்ஃபி எடுக்க முயற்சித்து 60 அடி பள்ளத்தில் விழுந்த இளம் பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். நஸ்ரின் குரேஷி என்று அழைக்கப்படும் அந்த பெண், கொட்டும் மழையில், அங்கிருந்த உள்ளூர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டார். சுற்றுலா பயணிகள் அந்த இடத்தை சுற்றிப்பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Pune girl taking selfie falls into 60-foot gorge at Borane Ghat, rescued
Nasreen Qureshi was rescued with the help of the Home Guard and local residents. It occurred amidst heavy rain in the area.
Administration had banned tourist visits in that area.pic.twitter.com/Pve4Bvrrg5
— Pune City Life (@PuneCityLife) August 4, 2024
60 அடி பள்ளத்தில் விழுந்த இளம் பெண் பலத்த காயமடைந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Influencer Died : ரீல்ஸ் மோகம்.. 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!
செல்ஃபி எடுக்க சென்று உயிரிழந்த இன்ஃபுளூயன்சர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்வி காம்தார் என்ற 27 வயது இளம் பெண், தனது நன்பர்களுடன் சுற்றுலா சென்றார். சமூக ஊடக இன்ஃபுளூயன்சர் ஆன அவர், செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் கால் இடறி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ஆன்வி, சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் ஆன்வியின் உடலை மீட்டு மேலே கொண்டுவந்தனர். இந்த சம்பவம் அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதே போல மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.