5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : 7,000 அடி உயரம்.. 102 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Sky Diving | வேகமாக படிக்கும் திறன், மின்னல் வேகத்தில் ஓடுவது, மலைகளில் ஏறுவது உள்ளிட்ட அசாத்தியமான செயல்களை செய்து சாதனை செய்ய விரும்புவர். அப்படி தான் மூதாட்டி ஒருவர் சாதனை செய்துள்ளார். அவரின் சாதனை வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக உள்ளது. யார் அந்த மூதாட்டி அப்படி என்ன செய்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

Viral Video : 7,000 அடி உயரம்.. 102 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 27 Aug 2024 16:28 PM

ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி : பொதுவாக அனைவருக்கும் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற என்னம் இருக்கும். சிலர் கல்வியில் சாதிக்க வேண்டும் என்று விரும்புவர். சிலர் தொழில் அல்லது கலைகளில் சாதிக்க வேண்டும் என்று விரும்புவர். இதேபோல சிலர் தங்களுக்கு இருக்கும் அசாத்திய திறமைகளை வைத்து சாதிக்க விரும்புவர். உதாரணமாக வேகமாக படிக்கும் திறன், மின்னல் வேகத்தில் ஓடுவது, மலைகளில் ஏறுவது உள்ளிட்ட அசாத்தியமான செயல்களை செய்து சாதனை செய்ய விரும்புவர். அப்படி தான் மூதாட்டி ஒருவர் சாதனை செய்துள்ளார். அவரின் சாதனை வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக உள்ளது. யார் அந்த மூதாட்டி அப்படி என்ன செய்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Viral Video : ரயில் தண்டவாளத்தி படுத்து தூங்கிய முதியவர்.. நெருங்கிய ரயில்.. அடுத்து நடந்தது என்ன?

102 வயதில் ஸ்கை டைவிங்க் செய்து சாதனை படைத்த மூதாட்டி

மனேட்டே பெய்லி என்ற பிரிட்டிஷ் மூதாட்டி UK-ன் அதிக வயதில் ஸ்கை டைவிங் சென்றவர் என்ற சாதனையை செய்துள்ளார். அவருக்கு வயது 102. பெய்லியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் இந்த சாதனையை செய்துள்ளார். சுமார் 7,000 அடி உயரத்தில் இருந்து மூதாட்டி ஸ்கை டைவிங் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

7,000 அடி உயரத்தில் இருந்து அசால்டாக ஸ்கை டைவிங் செய்த பெய்லி

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், மூதாட்டி பாதுகாப்பு உடைகள் அணிந்துக்கொண்டு 7,000 அடி உயர்த்தில் இருந்து எலிக்காப்டரில் இருந்து கீழே குதிக்கிறார். அவ்வாறு கீழே குதிக்கும் போது அவர் முகத்தில் சிரிதேனும் பயமோ, பதட்டமோ காணப்படவில்லை. ஸ்கை டவிங் முடித்து அவர் கீழே இருங்கும் போது, அங்கிருப்பபர்கள் ஓடி வந்து உங்களது அனுபவம் எப்படி இருந்தது என கேட்கின்றனர். அதற்கு அந்த மூதாட்டி அற்புதமாக இருந்தது என்று சிரித்துக்கொண்டே பதிலளிக்கிறார். 102 வயதிலும் மனம் தளறாமல் ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்த மூதாட்டியை கண்டு நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : வாஷிங் மெஷினில் மறைந்திருந்த 5 அடி நீள ராஜநாகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பெய்லியை போல உடல் வலிமையும், மன வலிமையும் வேண்டும் என்றும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Latest News