5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Udhayanidhi stalin

Udhayanidhi stalin

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மிக முக்கிய இடத்தில் உள்ளது. கலைஞர் மு. கருணாநிதி தொடங்கிய திமுக இன்று அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் பிரவேசித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பு, திரைப்பட நடிப்பு என ஆர்வம் காட்டி வந்த உதயநிதி 2018 முதல் தீவிர அரசியலில் களமிறங்கினார். நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் 2019ல் திமுக இளைஞர் அணிச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திருவல்லிக்கேனி எம். எல்.ஏ. ஆனார். பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார் உதயநிதி. இவர் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Read More

விஜய்யை மறைமுகமாக விமர்சித்த துணை முதலமைச்சர்.. சொன்னது என்ன?

திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல பேர் கிளம்பி இருக்கிறார்கள் தி.மு.க வை அழிப்பேன் என்று அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. நம்முடைய தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக சாடியுள்ளார்.

Ajithkumar: ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அஜித்தை அழைத்த உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin: உதயநிதியின் இந்த வாழ்த்து சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், மறுபுறம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய விஜய் திமுகவை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக திராவிட மாடல் அரசு என சொல்லிக்கொள்ளும் கூட்டம் தன்னுடைய அரசியல் எதிரி என தெரிவித்தார்.

“சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்” உதயநிதி மீது பவன் கல்யாண் மறைமுக விமர்சனம்!

சனாதன தர்மத்தை உங்களால் அழிக்க முடியாது. அழிக்க நினைத்தால் நீங்கள் அழிந்து போவீர்கள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில பேசிய பவன் கல்யாண், "சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால், நீங்கள் அழிந்து போவீர்கள். ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன்" என்று மறைமுகமாக உதயநிதியை விமர்சித்தார் பவன் கல்யாண்.

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவையில் முந்திய உதயநிதி.. சீனியர்களை பின்னுக்கு தள்ளிய துணை முதல்வர் பதவி!

Deputy CM Udhayanidhi: தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு கடந்த 28ஆம் தேதி வெளியானது.

”அவரே பாவம்.. தெளிவா சொல்லிட்டாரு” ரஜினியிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி… உதயநிதி கலகல!

சென்னை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த பேசிய கருத்து இணையத்தில் வைரலானது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசியல் என்னிடம் கேட்காதீங்க என்று ஆவேசத்துடன் கூறிய வீடியோக்கள் வைரலானது. இதற்கு தற்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலகலப்பான பதிலை கூறியிருக்கிறார்.

Udhayanidhi Stalin: 10 நாட்களில் துணை முதல்வராகிறாரா உதயநிதி? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

Deputy CM: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது இன்னும் ஓரிரு நாட்களோ அல்லது 10 நாட்களுக்குள் அறிவிப்பு வர அதிக வாய்ப்புள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.  அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் அவ்வப்போது குரலெழுப்பி வரும் நிலையில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் இந்த தகவலை கூறியுள்ளார்.

TN Deputy CM : தமிழகத்தின் துணை முதலமைச்சர் யார் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார் – உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin | தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்ட நிலையில், திமுக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக தலைமையிலான இந்த ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.. நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Periyar Birthday | பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது நினைவு இடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் பூ மாலை வைத்து, பூக்களை தூவி விஜய் மரியாதை செலுத்தினார்.