5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Suriya

Suriya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிக் கட்டிப் பறப்பவர் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் சிவக்குமார். இதுதான் அவரது பெற்றோர் அவருக்கு வைத்த பெயர். சரவணனின் பெயரை சூர்யா என்று மாற்றியது இயக்குநர் மணிரத்னம். சரவணன் என்று ஒரு நடிகர் திரைத்துறையில் இருப்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்கு இந்த பெயரை அவர் வைத்துள்ளார். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை, சிறுவயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றே விரும்பினார். படிப்பை முடித்துவிட்டு நடிக்கத் தொடங்குவதற்கு முன் கார்மென்ஸ் தொழிற்சாலை ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். 1997-ம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் சூர்யா. முதல் 4 வருடங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்க முடியாத சூர்யாவின் திரை வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது 2001-ம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படம். 2003-ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக காக்க காக்க படத்தில் கலக்கியிருப்பார். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கஜினி மற்றும் சிங்கம் போன்ற அவரது பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டன. தொடர்ந்து பல மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார் சூர்யா

Read More

Kanguva Song : கங்குவா திரைப்படத்திலிருந்து வெளியான ‘ஃபயர்’ வீடியோ பாடல்..!

Fire Video Song : தமிழ்த் திரைப்படங்களில் பிரபல நடிகராக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி பிரம்மாண்டமாக வெளியான படம் கங்குவா. தற்போது அந்த திரைப்படத்திலிருந்து ஃபயர் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது

சூர்யா 45 படத்திலிருந்து விலகிய ஏ.ஆர். ரஹ்மான்?! காரணம் இதுதானா?

Sai Abhyankkar : தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் நடிகர்களின் பட்டியலில் நடிகர் சூர்யாவும் இருந்துவருகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக அமைந்திருந்தாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கடும் தோல்வியைப் பெற்றது.

Suriya : கங்குவா தோல்வி… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுடன் மீண்டும் கைகோர்க்கும் சூர்யா..!

Suriya New Movie :தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் கங்குவா. இந்த படம் கடுமையான தோல்வியைச் சந்தித்த நிலையில்இ மீண்டும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் படத்தில் இணையவுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் சூர்யா – வெற்றிமாறனின் வாடிவாசல் பட அப்டேட்

சூர்யா நடிப்பில் கங்குவா படத்திற்கு முன்னதாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கங்குவா படமும் 350 கோடி ரூபாய் செலவில் உருவாகி 100 கோடி வசூல் செய்யவே திணறியது.

ஓடிடியில் வெளியாகும் ‘கங்குவா’… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் படம் வருகின்ற 8-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது குறித்த அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளனர்.

Actress Trisha: 19 வருஷமாச்சு.. மீண்டும் இணையும் சூர்யா – த்ரிஷா.. ஷூட்டிங் தொடக்கம்!

Suriya 45 : சூர்யா மற்றும் த்ரிஷா இருவரும் மௌனம் பேசியதே மற்றும் ஆறு படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். ஆய்த எழுத்து படத்தில் இருவரும் வெவ்வேறு நபர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தனர். மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவுடன் ஒரு பாடலுக்கு சூர்யா நடனமாடியிருந்தார். 

மூன்று வார முடிவில் கங்குவா வசூலித்தது எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ

350 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் 100 கோடியை தாணவே திணறியது. படத்தில் ஒலி அதிகமாக இருப்பதாக வந்த விமர்சனத்தை தொடர்ந்து ஒலியின் அளவை படக்குழு குறைத்தது. ஆனாலும் படத்தில் வரும் வசனங்களை விட பின்ன்ணி ஒலி அதிகமாக இருந்ததால் வசனம் சரியாக புரியவில்லை என்றும் படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் செய்தனர்.

சூர்யா 44 திரைப்படத்திற்கு வந்த டைட்டில் பிரச்சனை..!?

Surya44 : தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், அஜித் வரிசையில் டாப் 5 நடிகர்களில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை பெற்றுக் கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா – ஜோதிகா

நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கங்குவா’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 350 கோடி ரூபாய்க்கு அதிகமான பொருட்செலவில் உருவான இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டவே திணறியது.

கங்குவா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Kanguva Movie: கங்குவா படம் உலகளவில் வசூலில் ரூ.100 கோடியைத் தற்போது தாண்டி உள்ளது. 350 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் 100 கோடியை தாணவே திணறியது. படத்தில் ஒலி அதிகமாக இருப்பதாக வந்த விமர்சனத்தை தொடர்ந்து ஒலியின் அளவை 2 பாயிண்ட் குறைத்து படத்தை ஓட்டுமாறு திரையரங்கு உரிமையாளர்களிடம் தயாரிப்பாளர் ஞானவேல் கோரிக்கை வைத்திருந்தார்.

இணையத்தில் கவனம் பெறும் ‘கங்குவா’ படத்தின் மேக்கிங் வீடியோ!

கங்குவா படம் உலகளவில் வசூலில் ரூ.100 கோடியைத் தற்போது தாண்டி உள்ளது. 350 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் 100 கோடியை தாணவே திணறியது. இந்த நிலையில் படத்தில் முதலையுடன் சூர்யா சண்டையிடும் காட்சியின் மேக்கிங் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

‘கங்குவா’ படத்திலிருந்து வெளியானது ‘யோலோ’ பாடல் வீடியோ

Yolo - Audio Song | சூர்யாவின் நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Kanguva: 9 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல் எவ்வளவு?

Kanguva Box Office Collection : தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பிலும் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்திலும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் வெளியாகி 9 நாட்கள் முடிந்த நிலையில், தற்போது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Surya 45: 19 ஆண்டுக்கு பின் சூர்யாவுக்கு ஜோடி.. யார் இந்த பிரபலம்?

Surya 45 Update : தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் சூர்யா நடிப்பில் நவம்பர் 14ம் தேதி வெளியான கங்குவா திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சூர்யா தனது 45வது படத்தில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கிறார்.

சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் ஒரு வார வசூல்.. வெளியான தகவல்!

kanguva collection : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்து வருபவர்தான் சிறுத்தை சிவா. இவரின் இயக்கத்திலும் நடிகர் சூர்யாவின் முக்கிய நடிப்பிலும் பல் கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்ட திரைப்படமாக வெளியானது கங்குவா. கடந்த நவம்பர் 14ம் தேதி உலகமெங்கும் வெளியானது