5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Rajinikanth

Rajinikanth

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் பேருந்து நடத்துநர் டூ டாப் சினிமா ஸ்டார் என உயர்ந்தவர் ரஜினி. 1970களில் பெங்களூரு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்துக்கொண்டிருந்த சிவாஜி ராவுக்கு நடிப்பு மீது ஆசை. அருகில் இருந்த நண்பர்கள் சிவாஜி ராவை ஊக்கப்படுத்த சினிமாவில் நடிப்பதற்காக 1973ல் சென்னை வந்தார் சிவாஜி ராவ். அப்போது சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயின்றார். பின்னர் சினிமாவில் வாய்ப்பு தேடியவருக்கு அபூர்வ ராகங்கள் வாய்ப்பு கிட்டியது. அப்போது அவர் ரஜினிகாந்த் ஆனார். இப்படத்தை பாலச்சந்தர் இயக்கினார். தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி பின்னர் முழு நேர ஹீரோவாக மாறினார். அடுத்தடுத்த படங்கள் வெற்றிபெற தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தொடக்கம் முதலே அரசியலுக்கு அடிபோட்ட ரஜினி கடைசிவரை அதற்குள் வராவே இல்லை. இதற்கிடையே தான் ரசித்து வந்த சினிமாவை இன்னமும் தொடர்ந்து வருகிறார் ரஜினிகாந்த்.

Read More

Rajinikanth Birthday : ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரீ ரிலீஸாகும் ‘தளபதி’ திரைப்படம்..!

Thalapathy Re-release: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக பல திரைப்படங்களை முன்னணி கதாநாயகனாக வலம்வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்துவருகிறார். நாளை டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி ரீ ரிலீஸாக உள்ளது.

‘ஜெயிலர் 2’ ரிலீஸ் அடுத்த வருஷமா..? மாஸ்டர் பிளான் போடும் இயக்குநர் நெல்சன்!

Jailer 2 Update : தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை பிரபல நடிகர்கள் லிஸ்டில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Cinema Rewind: டீ கொண்டு வந்த பையன்.. ரஜினி செய்த சம்பவம்.. வியந்து போன ரேகா!

Rekha Harris :தமிழ்த் திரைப்படங்களில் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த நடிகையாக இருந்து வந்தவர் ரேகா. இவர் நடித்த முதல் திரைப்படத்தின் மூலமாகவே மிகவும் ஃபேமஸ் ஆனார். " கடலோரக் கவிதைகள் ரேகா" என்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம். இப்படத்தினை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற படங்களிலும் கதாநாயகியாகப் பல படங்களில் நடித்துள்ளார்.

Rajinikanth Cinema Rewind : ஒரே வருடத்தில் 18 படத்தின் ஹீரோ.. ரஜினிகாந்த் சொன்ன ரகசியம்!

Manobala : தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகனாக பல படங்களில் நடித்து வந்தவர் மனோ பாலா. தமிழ் முன்னணி நடிகர்களான கமல், விஜயகாந்த், விஜய் மற்றும் ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களில் படங்களில் காமெடி நடிகராக நடித்துப் பிரபலமானார். இவர் இயக்குநரும்கூட.

Rajinikanth Car Story : அவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. நடந்தே வந்த ரஜினிகாந்த்.. கெத்து காட்டிய ரஜினியின் கார் கதை!

ஒரு ஒயிட் அம்பாசிட்டர் கார் வேகமா வந்து நின்னது. அந்த தயாரிப்பாளர் எறங்குனாங்க. எடுத்த உடனே என்னடா நீ என்ன பெரிய ஆர்ட்டிஸ்டா? பெரிய ஹீரோவா? இப்பதான் வந்துருக்க 4, 5 படம் பன்னியிருக்க என்ன பணம் கொடுக்கலனா மேக்கப் போடமாட்டியா? உங்களாம் எத்தன பேர பாத்துருக்கேன். கேரெக்டரும் கிடையாது ஒன்னும் கிடையாது போடா என்று சொல்லிட்டாரு.

‘எப்போது நடந்தது?’ – திருவண்ணாமலை மண் சரிவு குறித்து ஷாக்கான ரஜினி!

Rajinikanth Reaction : திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளம் மற்றும் மணல் சரிவு காரணமாக அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் புதைந்ததில் குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Coolie: நடிகர் ரஜினியின் “கூலி” படத்தில் இணைந்த விஜய் பட நடிகை.. யார் தெரியுமா?

Rajinikanth : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வெற்றியினை பெற்றது. தற்போது இப்படத்தினை அடுத்தாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Fanatics : சினிமாவும் ரசிகர்களும்.. அலசி ஆராயும் ஆவணப்படம்!

ஆரம்ப காலக்கட்டத்தில் வில்லனாக தொடர்ந்து நடித்த ரஜினி பின்னர் நாயகனாக நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். சுமார் 175 படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் ரஜினி.

33 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் ரஜினி?

New Movie Update :தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் கூலி திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிலையில் இப்படத்தினை அடுத்து முக்கிய இயக்குநருடன் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

எம்.ஜி.ஆர் குறித்து அன்றே கணித்தார் ஜானகி… நூற்றாண்டு விழாவில் ரஜினி சொன்ன சுவாரஸ்ய தகவல்!

இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் அழைப்பு சென்றுள்ள நிலையில் அவர் நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை நிகழ்ச்சியின் மேடையில் ஒளிபரப்பியுள்ளனர்.

அரசியல் அனுபவத்தை பகிர்ந்த ரஜினி.. குலுங்கி குலுங்கி சிரித்த இபிஎஸ்!

Rajinikanth : சென்னை வானகரத்தில் இன்று முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையின்போது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அப்போது, விழாவில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரஜினி பேச்சு கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்.

நீங்க சங்கியா? ரஜினியுடன் என்ன பேசீனிங்க? சீமான் பதில்!

Seeman Rajinikanth meeting : ரஜினியுடன் அரசியல் பேசினேன் என சீமான் கூறியுள்ளார். மேலும், இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு எனவும் முன்பே அவரை சந்திக்க திட்டமிட்டேன் எனவும் சீமான் பதிலளித்துள்ளார்.

Seeman Rajinikanth: திடீரென ரஜினியை நேரில் சந்தித்த சீமான்.. பின்னணி என்ன?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களது சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Tamil Cinema: தொடரும் வேட்டை.. ரூ.300 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிய தமிழ் படங்கள்!

Highest Collection Movies :தமிழ்த் திரைப்படங்கள் என்றாலே மக்களுக்குத் தனி கொண்டாட்டம்தான். அதிலும் முன்னணி கதாநாயகர்கள் ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு வரவேற்புகள் இருக்கும். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இதுவரை ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ.!

Tirunelveli: தியேட்டராக மாறிய பள்ளி.. வேட்டையன், கோட் படம் ஒளிபரப்பால் சர்ச்சை!

தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் மாணவர்கள் செல்போன் போன்ற மின்னணு சாதங்களுக்கு அடிமையாவதால் மிகுந்த மன அழுத்தம் மன உளைச்சல் போன்ற பிரச்சனைகள் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களது கல்வியில் எதிரொலிப்பதால் பள்ளிகளில் விளையாட்டு, யோகா போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளை அதிகளவில் அளிக்க வேண்டும். திரைப்படங்கள் திரையிடுவது சரியாக இருக்காது