5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Nayanthara

Nayanthara

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். கேரளாவைச் சேர்ந்த அவர் நடிக்க வருவதற்கு முன் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். தமிழில் ரஜினி, விஜய், அஜித். விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். பல சர்ச்சைகளை சினிமாவில் கடந்து வந்துள்ள நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். தமிழில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தொழில்துறையிலும் கால் பதித்து தனக்கென தனியிடம் பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் தனது நடிப்பு திறமையால் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் கதையின் நாயகியாகவும் கலக்கி வருகிறார். நயன்தாரா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அனைத்தையும் இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

Read More

Cinema Year Ender: 2024ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகைகளின் லிஸ்ட்!

Highest paid South Indian actresses : தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்து வருகின்றனர். அதில் தனது நடிப்பின் மூலமாகவும் மற்றும் தனது தனிப்பட்ட திறமைகளின் மூலமாகவும் பிரபலமான நடிகைகள் பலர் உள்ளனர். அதில் இந்த 2024ம் ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கிய டாப் நடிகைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

இணையத்தில் கவனம்பெறும் நயன்தாராவின் ‘KARMA SAYS’ இன்ஸ்டா ஸ்டோரி

Actress Nayanthara: நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘ராக்காயி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆக்‌ஷன் காட்சிகளில் இவர் மிரட்டியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

நடிகை நயன்தாராவின் “ராக்காயி” படத்தின் டைட்டில் டீசர்!

Rakkayie Title Teaser : தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது அவரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் இருக்கும் திரைப்படங்களில் நடிப்பதற்காக முன்னுரிமை அளித்துவருகிறார்.

ஹாப்பி பர்த்டே நயன்தாரா..லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய சுவாரஸ்ய தகவல்..!

Actress Nayanthara : தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் முதன்மையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தனது மாறுபட்ட நடிப்பினாலும், சினிமா மீது கொண்டுள்ள அதிக ஈர்ப்பினாலும் தமிழ் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் பாண் இந்திய பிரபல நடிகையாக வலம் வருபவர் நயந்தாரா. இன்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டாரை பற்றிய சுவாரஸ்ய தகவலைப் பற்றிப் பார்க்கலாம்

தனுஷ் – நயன்தாரா இடையே என்னதான் பிரச்னை? திடீர் பரபரப்பான கோலிவுட்!

Nayanthara and Dhanush: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்களின் திருமண வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. ஆனால் திருமணம் நடைப்பெற்றும் இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த ஆவணப்படம் வெளியாகாமலே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

“பழி வாங்குகிறார்”.. நடிகர் தனுஷ் மீது நயன்தாரா பரபர குற்றச்சாட்டு.. மூன்று பக்க அறிக்கை!

Nayanthara: படத்திற்கு எதிரான உங்கள் பழிவாங்கும் எண்ணம் என்னையும் எனது கணவரை மட்டும் பாதிக்கவில்லை, இந்த படத்திற்காக தங்கள் முயற்சியையும் நேரத்தையும் கொடுத்த அனைவரையும் பாதிக்கிறது. நான், என் வாழ்க்கை, என் காதல் மற்றும் திருமணம் பற்றிய இந்த நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் எனது நலன் விரும்பிகள் பலரின் வாழ்த்துகள் மற்றும் நான் நடித்த பல படங்களில் இருந்த நினைவுகளும் உள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிக முக்கியமான படமான நானும் ரவுடி தான் சேர்க்கப்படவில்லை.

நயன்தாராவின் பேயொண்ட் தி ஃபரி டைல் டிரைலர் வெளியாகியது..!

Nayanthara's Beyond the Fairy Tale Trailer : தமிழ் பிரபல நடிகைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. மலையாளம் திரைப்படங்கள் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாத நடிகையாக இருந்துவருகிறார். சுமார் 75 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

நடிகை நயன்தாராவிற்கு பிடித்த சீரியல் இதுதானாம்… இணையத்தை கலக்கும் தகவல்

Nayanthara: தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்தார் நயன்தாரா. தற்போது நாயகிகளுக்கு முக்கியதுவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் நடிகை நயன்தாரா தொடர்ந்து விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி தொடர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.