5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Kamala Harris

Kamala Harris

கமலா ஹாரிஸ்

கஃலிபோர்னியாவில் பிறந்தவர் கமலா ஹாரிஸ். இவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். இவரது தாய் ஷியாம கோபலன் தமிழகத்தைச் சேர்ந்தவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரத்தை பூர்வீமாகக் கொண்டவர். தடகள வீரரான கமலா ஹாரிஸ், 1990ஆம் ஆண்டில் ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 2010 மற்றும் 2014 என இரண்டு முறை கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய முதல் பெண் என்ற பெருமை இவருக்கே சேரும். இதன்பின், 2017ல் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய கமலா ஹாரிஸ், அதே ஆண்டில் செனட் உறுப்பினராக பொறுப்பேற்றார். பின்னர், 2020ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் நிற்பதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால், உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்தால் போட்டியில் இருந்து விலகினார். இருப்பினும், உட்கட்சி தேர்தலில் வென்ற ஜோ பைடன், தன்னுடைய துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை தேர்வு செய்தார். பின்னர் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற, கமலா ஹாரிஸ் துணை அதிபரானார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றார்.

Read More
0

US Presidential Election: ”இருண்ட காலத்தை நோக்கி நகரும் அமெரிக்கா” தேர்தல் தோல்விக்கு பின் கமலா ஹாரிஸ் எச்சரிக்கை!

Kamala Harris : உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பிட்ட போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதே நேரத்தில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் படுதோல்வியை சந்தித்தார்.

US Election Results 2024: பட்டையை கிளப்பிய ட்ரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றி!

குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ர்ம்ப் வெற்றி பெற்று 47வது அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்த அவர் மீண்டும் 4 ஆண்டு இடைவெளிக்குப் பின் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கடுமையான போட்டியளித்த நிலையில் தோல்வியை தழுவினார்.

Kamala Harris: ட்ரம்பை அலறவிட்ட கமலா ஹாரிஸ்.. ஒரே அடியில் உயர்ந்த வாக்கு!

Kamala Harris: வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னணியில் இருந்தாலும் அவருக்கு மிகுந்த போட்டி கொடுக்கும் வகையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் உள்ளார். இதனிடையே அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணத்தில் ஒன்றான கலிபோர்னியாவில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

US Election Results: அமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகமே எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருவது எதிர்பாராத திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. தற்போது அமெரிக்கா அதிபராக உள்ள ஜோ பைடன் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்யும் பொருட்டு தேர்தல் இந்திய நேரப்படி நவம்பர் 5 ஆம் தேதியான நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று […]

US Presidential Election: விறுவிறுப்பாக நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. மழையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களிப்பு!

America: இந்திய நேரப்படி இன்று மாலை 5.30  மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நாளை அதிகாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. 50 மாகாணங்களில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவு முடிந்த உடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும். இதனிடையே அங்குள்ள மிசோரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ள நிலையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு கருதி சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

Evening Digest 05 November 2024: அமெரிக்க அதிபர் தேர்தல்.. மன்னிப்பு கேட்ட கஸ்தூரி.. இன்றைய டாப் 10 செய்திகள்!

இன்றைய (நவ.5, 2024) முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

US Presidential Election: கமலா ஹாரிஸ் vs ட்ரம்ப்.. அமெரிக்காவை ஆளப்போவது யார்?

இந்திய நேரப்படி மாலை 5.30 தொடங்கி நாளை நவம்பர் 6 அதிகாலை 5:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆன டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக பதவி வகித்து வரும் கமலா ஹாரிஸ் களம் கண்டுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

US Presidential Election 2024: இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. இந்திய நேரப்படி எப்போது தெரியுமா?

வல்லரசு நாடான அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்நாட்டின் அதிபராக ஜோ பைடன் இருக்கும் நிலையில் அவரின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடப்பாண்டு ஜனவரி மாதத்திலேயே தொடங்கி விட்டது. அமெரிக்காவின் சட்டப்படி நவம்பர் மாதம் பிறந்து வரும் முதல் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

US President Election: இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. எப்படி வாக்குப்பதிவு நடக்கும் தெரியுமா?

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸூம் களம் காண்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே சொற்ப வித்தியாசத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த இருவரில் யார் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளூர் முதல் உலகம் வரை எழுந்துள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது இந்தியா பற்றி பேசிய கமலா ஹாரிஸ்.. என்ன சொன்னார் தெரியுமா?

கமலா ஹாரிஸ் இதை தெற்காசிய இணைய வெளியீடான தி ஜக்கர்நாட்டின் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். துணை ஜனாதிபதி என்ற முறையில் எனது வீட்டில் (துணை ஜனாதிபதியின் இல்லத்தில்) தீபாவளி கொண்டாட்டங்களை நடத்துவது எனக்கு பெருமையாக உள்ளது என்றும், தீபாவளி என்பது வெறும் விடுமுறை மட்டுமல்ல, தெற்காசிய அமெரிக்க புலம்பெயர்ந்தோரின் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காகவும் என தெரிவித்துள்ளார்.