5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Indian cricket team

Indian cricket team

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகிறது. இது ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினராக உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலக கிரிக்க்ர்ட் அரங்கில் டீம் இந்தியா மற்றும் மென் இன் ப்ளூ போன்ற பெயர்களிலும் அன்போடு அழைக்கப்படுகிறது. உலக கிரிக்கெட்டில் 1000க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சில அணிகளில் இதுவும் ஒன்று. ஒட்டுமொத்தமாக, இந்திய கிரிக்கெட் அணி தற்போது சுமார் 1800 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளது. இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மாவும். டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவும் கேப்டனாக உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983 மற்றும் 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையும், 2007 மற்றும் 2024 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் வென்றுள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயால் இந்திய கிரிக்கெட் அணி நிர்வகிக்கப்படுகிறது.

Read More

Year in Search 2024: 2024ல் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் இவரா! கோலி முதலிடம் இல்லையா..?

Hardik Pandya: ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது ஹர்திக் பாண்டியாவை மைதானத்திலேயே வைத்து ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். மேலும், தகாத வார்த்தைகளாலும் திட்டி தீர்த்தனர். மேலும், 2024 ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

On This Day in 2022: இளம் வயதில் அதிவேக இரட்டை சதம்.. இதேநாளில் மிரள வைத்த இஷான் கிஷன்..!

Ishan Kishan: வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் 126 பந்துகளில் 200 ரன்களை கடந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 131 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 210 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Cricket Year Ender: 11 ஆண்டுகால ஐசிசி கோப்பை வறட்சி.. இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் ஆனது எப்படி?

Year Ender 2024: டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தனது முதல் போட்டியில் இருந்து எப்படி விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது என்ற விவரத்தை இயர் எண்டர் பிளானாக பார்க்கலாம்.

WTC POINTS TABLE 2025: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தோல்வி.. 3வது இடத்திற்கு சரிந்த இந்திய அணி..!

World Test Championship: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்விக்கு பிற்கு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு, கடந்த முறை முதலிடத்தில் இருந்த இந்திய அணி, இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

IND vs AUS: ஆஸிக்கு எதிராக களமிறங்கும் ஷமி.. உடனடியாக அழைத்த பிசிசிஐ.. காரணம் என்ன..?

Mohammed Shami: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் வருகின்ற டிசம்பர் 14ம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்டில் முகமது ஷமி விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், இதற்குள் முகமது ஷமி தனது உடற்தகுதியை நிரூபித்து, பயிற்சியிலும் ஈடுபட வேண்டும்.

India vs Australia 2nd Test: அடுத்தடுத்து 5 விக்கெட்கள் இழப்பு.. மீண்டும் சொதப்பிய இந்திய அணி!

Team India: இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஜோடியான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஏமாற்றம் அளித்தனர். முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் எடுத்த ராகுல், இரண்டாவது இன்னிங்சில் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Australia vs India, 2nd Test: மீண்டும் வேலைக்காட்டிய டிராவிஸ் ஹெட்.. இந்தியாவிற்கு எதிராக அதிரடி சதம்!

Travis Head: லண்டனில் நடைபெற்ற 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஹெட் 174 பந்துகளில் 163 ரன்கள் எடுத்தார். இன்றைய போட்டியில் சதம் அடித்ததன்மூலம், பகல்-இரவு டெஸ்டில் அதிக சதம் அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்தார்.

IND vs AUS Pink Ball test: பிங்க் பால் டெஸ்ட் என்றால் என்ன? பிங்க் பந்தில் மட்டும் விளையாட காரணம் என்ன..?

IND vs AUS Day Night Test: கடந்த 2019ம் ஆண்டு பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி, பிங்க் நிற பந்து பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். இதையடுத்து, அதே ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் பகலிரவு டெஸ்ட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

IND VS AUS: பிங்க் பால் டெஸ்ட் பற்றிய சுவாரஸ்யங்கள்.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா!

IND vs AUS Pink Ball Test: டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 10 அணிகளுக்கு இடையே மொத்தம் 22 பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில், மொத்தம் 27 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்த சத பட்டியலில் இந்திய தரப்பில் இருந்து 1 சதம் மட்டுமே பதிவாகியுள்ளது. 2019 நவம்பரில வங்கதேசத்திற்கு எதிராக விராட் கோலி அடித்த ஒரே சதம் இதுவாகும்.

WTC Final: எளிதாக இறுதிப்போட்டிக்குள் நுழையப்போகும் இந்தியா.. பயத்தில் பலமிக்க ஆஸ்திரேலியா..!

India vs Australia: இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா 4-1, 3-1 அல்லது 3-2 என்ற கணக்கில் வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். இதன் மூலம் இந்திய அணியை முந்திச் சென்று இறுதிப் போட்டிக்குள் ஆஸ்திரேலிய அணி நுழையும்.

Champions Trophy 2025: ஹைப்ரிட் மாடலுக்கு சம்மதம்.. இறங்கி வந்த பாகிஸ்தான்.. ஐசிசிக்கு ட்விஸ்ட் கொடுத்த பிசிபி!

India vs Pakistan: இந்தியா நடத்தும் எந்தவொரு போட்டிக்கும் பாகிஸ்தான் தனது அணியை இந்தியா செல்ல அனுமதிக்காது. மாறாக பாகிஸ்தானின் போட்டிகலை இந்தியாவுக்கு வெளியே வேறு ஏதாவது ஒரு நாட்டில் நடத்தப்பட வேண்டும்.

AUS vs IND: சோனமுத்தா போச்சா.. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி!

Team India: 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடாடதால் அவருக்கு பதிலாக இந்தியா அணியின் கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரீத் பும்ரா ஏற்றார்.

India vs Australia: சதத்துடன் பார்முக்கு திரும்பிய கோலி.. தோல்வியை நோக்கி ஆஸி.. கலக்கிய இந்திய வீரர்கள்..!

India vs Australia 1st Test, Day 3: இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்த பிறகு, கேஎல் ராகுல் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

BGT 2024-25: நாளை முதல் பார்டர்-கவாஸ்கர் டிராபி.. 3 அமர்வுகள் என வெளியான முதல் டெஸ்ட் டைமிங்!

India vs Australia 1st Test: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் அமர்வு நேரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

ICC T20I Rankings: ஆல்ரவுண்டர்கள் சிம்மாசனத்தில் ஹர்திக்.. அதிரடி முன்னேற்றம் கண்ட திலக்.. ஐசிசி டி20 தரவரிசை!

Hardik Pandya: ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா முதல் இடத்தை பிடித்தார். இதன்மூலம், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை முந்தி முதல் இடம் பிடித்தார். இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா 352 ரன்களுடன், 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.