5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Christmas

Christmas

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை என்றால் அது கிறிஸ்துமஸ் தான். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படும். இந்த நாளில் அனைத்து விதமான தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்த்துகளை உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் தெரிவிப்பர். சொல்லப்போனால் கிறிஸ்துமஸ் பண்டிகை அனைத்து மத மக்களாலும் இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பெரும்பாலான நாடுகளில் அரசு விடுமுறையாகும். அதுமட்டுமல்லாமல் பெத்லகேமில் மாட்டு தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்ததை குறிக்கும் வகையில் வீட்டில், தேவாலயங்கள், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் குடில் அமைத்து கொண்டாடுவர். அதுமட்டுமல்லாமல் கேக் தயாரிக்கும் நிகழ்வு நடைபெறுவதோடு, வீட்டின் வாயிலில் இயேசு பிறந்ததை வழிகாட்டும் வகையில் விதவிதமான ஸ்டார்களும் கட்டப்படும். நாம் இந்த தொகுப்பில் கிறிஸ்துமஸ் விழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக காணலாம்

Read More

Tamil Nadu Famous Churches: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. தமிழகத்தின் பிரபலமான தேவாலயங்கள்

பிரபல தேவாலயங்கள்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில் சிலர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வெளியூரில் சென்று கொண்டாட திட்டமிடுவார்கள். அந்த வகையில் தமிழகத்தின் பிரபலமான மற்றும் பழமை வாய்ந்த தேவாலயங்களுக்கு சென்று இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுங்கள்.

Christmas chicken Recipes: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. சிக்கனை வைத்து இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க!

Recipes For Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகையில் இனிப்புகளுக்கு இடையே காரசாரமான உணவுகளை செய்து அசத்துங்கள். ஒரே முறையில் சிக்கனை செய்யாமல் இந்த முறை வித்தியாசமாக முயற்சி செய்யுங்கள். வீட்டிலேயே எளிமையாக சிக்கன் சிந்தாமணி, பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Christmas Recipes: வீட்டிலேயே சுவையான பிரவுனி, மால்புவா செய்வது எப்படி?

Christmas Sweets: பண்டிகை என்றாலே இனிப்பு வகைகள் இல்லாமல் முழுமைப்‌ பெறாது. பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விதவிதமான கேக் செய்வது வழக்கம். ஆனால் இம்முறை பிரவுனி மற்றும் மல்புவாவை உங்கள் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.

Christmas Churches: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… சென்னையில் உள்ள பழமையான தேவாலயங்கள் லிஸ்ட்!

Old Churches in Chennai: கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டதால் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள்.‌ இந்தப்‌ பண்டிகைக்கு விதவிதமான உணவுகள், கேக் வகைகள் தொடங்கி வீட்டு அலங்காரம் வரை மக்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

Christmas: ஓவன் இல்லாமல் கிறிஸ்துமஸ் பிளம் கேக்.. சிம்பிள் ரெசிபி!

How to Make a Marble Cake: கேக் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை முழுமை பெறாது. கிறிஸ்துமஸ் பண்டிகை ஒட்டி சந்தையில் பல்விதமான கேக்குகள் விற்கப்பட்டாலும் பிளம் கேக்கிற்கு மக்கள் மத்தியில் ‌தனி இடம் உண்டு. இந்த பிளம் கேக்கை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Christmas: வந்துவிட்டது கிறிஸ்துமஸ்! இம்முறை சுவையான வாழைப்பழ கேக் வீட்டிலேயே செய்யுங்கள்…

Banana Cake For Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டால் சொந்தம் பந்தம் நண்பர்களுக்கு கேக் கொடுப்பது வழக்கம். கடையில் கேக் வாங்கி கொடுப்பதை விட நீங்கள் வீட்டிலேயே சுத்தமாகவும் சுவையாகவும் செய்து உங்களின் அன்பானவர்களை அசத்துங்கள். வீட்டிலேயே எளிமையாக வாழைப்பழ கேக் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Christmas: உண்மையான சாண்டா கிளாஸ் யார்? கிறிஸ்துமஸ் தாத்தாவின் வரலாறு!

History of Santa Claus: கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டாலே வீதி முழுவதும் நிறைய சாண்டா கிளாஸ் உடை அணிந்த நபர்களை பார்க்க முடியும். கிறிஸ்துமஸ் தினம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சான்டா கிளாஸ் தான். ஆனால் இந்த சான்டா கிளாஸ் கற்பனை கதாபாத்திரம் என்றே பலரும் கருதுகின்றனர்.

கிறிஸ்துமஸ் மார்பிள் கேக் வீட்டிலேயே செய்யலாம்… இதோ ரெசிபி!

How to Make a Marble Cake: கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கேக் இல்லாமல் கிறிஸ்துமஸ் முழுமை அடையாது. நண்பர்களும் கிறிஸ்துமஸ் வந்துவிட்டால் கேக் கேக்க தொடங்கி விடுவார்கள். அவர்களுக்கு கடையில் வாங்கிக் கொடுக்காமல் வீட்டிலேயே சுவையான மார்பிள் செய்யலாம்

சாண்டா கிளாஸ் கற்பனை பாத்திரமா? கிறிஸ்துமஸ் சுவாரஸ்ய தகவல்கள்!

Interesting Facts about Christmas: உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவர்களால் கோலாலமாக கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம், அலங்காரம், சாண்டா கிளாஸ், பாடல்கள் என அந்த பண்டிகை கலைக்கட்டும். கிறிஸ்மஸ் தொடர்பான சில சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்மதுஸ் மரங்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

Interesting facts about Christmas Tree: உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். இந்த பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். உலகில் பல இடங்களில் பல்வேறு விதமான கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டு உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரம் வந்தது எப்படி தெரியுமா?

History of Christmas Tree: கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதற்காக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மிக முக்கியமானதாக கிறிஸ்துமஸ் மரம் கருதப்படுகிறது. ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இந்த கிறிஸ்துமஸ் மரம் எப்படி சேர்க்கப்பட்டது தெரியுமா?

Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படும் காரணம் தெரியுமா?

Christmas Celebration: மேரி என்ற கன்னிப் பெண்ணுக்கு மகனாய் அவதரித்தவர் தான் இயேசு கிறிஸ்து. அவரின் பிறந்த நாளை தான் கிறிஸ்துமஸ் தின விழாவாக உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டிசம்பர் 25ஆம் தேதி தான் அவர் பிறந்ததாக கூறப்பட்டு அந்த நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் டிசம்பர் 25ஆம் தேதி தான் பிறந்தார் என்பது பைபிளில் எங்கேயும் இல்லை என்ற தகவலை பற்றி உங்களுக்கு தெரியுமா? இயேசு கிறிஸ்து பிறப்பு எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்!

Christmas Decoration: இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலங்களும் கொண்டாடப்படும். இந்தப் பண்டிகைக்கு கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளாலும், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் நட்சத்திரங்களாலும் அலங்கரிப்பார்கள்.

Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை.. முதன்முதலில் குடில் வைத்தவர் யார் தெரியுமா?

X mas Festival: டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே முதலில் தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். தொடர்ச்சியாக கிறிஸ்தவ மக்கள் தங்களுடைய இல்ல வாயிலில் விதவிதமான வடிவங்களில் ஸ்டார்களை தொங்கவிட்டு அலங்கரிப்பார்கள். கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.