5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Bigg Boss Tamil

Bigg Boss Tamil

பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை அந்தந்த மொழிகளில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள். அவர்கள் 100 நாள்கள் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களிடம் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெளி உலகத்தினருடன் தொடர்பு இல்லாமல் ஒரே வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடையே நிகழும் அழுகை, கோபம், சண்டை, மகிழ்ச்சி,பொறாமை என எல்லா உணர்வுகளையும் வீட்டில் உள்ள கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்து மக்களிடம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில், கடந்த 7 சீசனாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஓடிடியில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். தற்போது இந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Bigg Boss Tamil : முத்துக்குமரனை டார்கெட் செய்யும் தர்ஷிகா.. பிக்பாஸ் அப்டேட்!

Bigg Boss Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நோ எலிமினேஷன் ஆனால் அதற்குப் பதிலாக 6 போட்டியாளர்கள் 'வைல்ட் கார்ட் எண்ட்ரியாக' உள்ளே வந்துள்ள நிலையில் மொத்தம் 21 போட்டியாளர்களுடன் நான்காவது வாரத்தைக் கடந்துவரும் நிலையில் மிகச் சுவாரஸ்ய விஷயங்கள் மற்றும் டாஸ்க்குகள் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத் தலைவராக முத்துக்குமரன் இருந்து வருகிறார்.

Bigg Boss Tamil Season 8: இந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் எவிக்ஷன் இல்லை! வைல்ட் கார்ட் என்ட்ரிதான்?

தமிழ் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புகளைப் பெற்றுவருவது பிக் பாஸ் நிகழ்ச்சியாகும். கடந்த 7 சீசன்களையும் நடிகர் கமல் தொகுத்துவந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்துவருகிறார். இந்நிகழ்ச்சி தொடங்கி 4 வாரங்களான நிலையில் இந்த பிக் பாஸ் வீட்டில் 4வது வாரத் தலைவராக முத்துக்குமாரன் இருந்துவருகிறார். அதனைத் தொடர்ந்து இந்தவார நாமினேஷனில் சுனிதா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, சத்யா, தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி மற்றும் அருண் என மொத்தம் 9 போட்டியாளர்கள் இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டிலில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து 4வது வார எவிக்ஷனில் யார் வெளியேறுவார் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துவரும் நிலையில் புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டில் நடந்த பட்டாசு டாஸ்க்… வைரலாகும் வீடியோ

முத்துகுமரன் இந்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார். அதனை தொடர்ந்து நடைப்பெற்ற இந்த வாரத்திற்கான நாமினேஷனில் ஜாக்குலின், சுனிதா, அன்சிதா, பவித்ரா, தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, அருண், சத்யா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். தொடர்ந்து ஆண்கள் அணியில் இருந்து விஷால் பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து சௌந்தர்யா ஆண்கள் அணிக்கும் இந்த வாரம் ஸ்வாப் ஆகியுள்ளனர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸிற்கு வந்த கவின்… உற்சாகத்தில் போட்டியாளர்கள்!

இந்த வாரத்திற்கான வீக்லி டாஸ்க் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதன்படி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களாக மாறி அவர்கள் குறித்து மக்கள் எதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை நடித்து வெளிப்படுத்த வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார். அதனை தொடர்ந்து போட்டியாளர்கள் பலர் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

BiggBoss Tamil: போட்டியாளர்களிடையே ஏற்படும் பிரிவினை.. பிக்பாஸில் வெடிக்கும் பிரச்னை!

எந்த சீசனிலும் இல்லாதா புதுவிதமாக உருவாக்கியது இந்த பிக் பாஸ் சீசன் 8. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் முதல் வார ஏவிக்ஷ்சனில் ரவீந்தர், இரண்டாவது வாரம் அர்னவ் மற்றும் தற்போது மூன்றாவது வாரம் எவிக்ஷனில் தர்ஷா குப்தா குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் தொடங்கி மூன்று நாட்களான நிலையில் இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவர் போட்டியில் முத்துக்குமாரன் மற்றும் வி.ஜெ. ஆனந்தி இருவரும் போட்டியிட்டனர் பிறகு ஆனந்தி வெற்றிபெற்று இந்த வாரத் தலைவராக இருக்கிறார்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் இந்த வார வீக்லி டாஸ்க் இதுதான்… வெளியானது வீடியோ

இந்த வார கேப்டன் போட்டியில் நேற்று ஆர்.ஜே.ஆனந்தி மற்றும் முத்துகுமரன் இருவரும் கலந்துகொண்டனர். இதில் வெற்றிப்பெற்ற முத்துகுமரன் இந்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார். அதனை தொடர்ந்து நடைப்பெற்ற இந்த வாரத்திற்கான நாமினேஷனில் ஜாக்குலின், சுனிதா, அன்சிதா, பவித்ரா, தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, அருண், சத்யா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் அதிரடியாக வெளியானது நாமினேஷன் வீடியோ… யார் வெளிய போவாங்க?

பிக்பாஸ் வீட்டை விட்டு நேற்று வெளியேறிய தர்ஷா பெண்கள் அணியினர் மீது இருந்த அதிர்ப்த்தியை வெளிப்படையாக பேசினார். பெண்கள் அணியில் 6 பேர் கொண்ட குழு உள்ளது. அவர்கள் அனைவரும் ஜாக்குலின் மற்றும் சுனிதா பேசுவது மட்டுமை கேட்டு நடப்பதாகவும் சுயமாக எதுவும் முடிவு செய்யவில்லை என்றும் வெளிப்படையாக பேசினர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியை தற்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுத்துவரும் நிலையில், கடந்த அக்டோபர் 6ம் தேதி முதல் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து இந்த போட்டியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் முதல் வார ஏவிக்ஷ்சனில் ரவீந்தர், இரண்டாவது வாரம் அர்னவ் மற்றும் தற்போது மூன்றாவது வாரம் நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில், இந்தவாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப் போகிறார் என்று மக்கள் மத்தியில் பல குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது வாரம் வெளியேறப் போகும் நபர் இவராகத்தான் இருக்கவேண்டும் என்ற தகவல்கள் வெளியாகிய வருகின்றனர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்றது ஆண்களா? பெண்களா? – வைரலாகும் வீடியோ

இந்த வார கேப்டனாக தர்ஷிகா இரண்டாவது முறையாக தேர்வானார். அதனைத் தொடர்ந்து,  இந்த வார நாமினேஷனில் பவித்ரா, சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா, முத்துகுமரன், அருண், சத்யா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் ஆண்கள் பெண்கள் கலந்து விளையாடும் டாஸ்க்… நடக்கப்போவது ஜாலியா? சண்டையா?

இந்த வார கேப்டனாக தர்ஷிகா இரண்டாவது முறையாக தேர்வானார். அதனைத் தொடர்ந்து,  இந்த வார நாமினேஷனில் பவித்ரா, சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா, முத்துகுமரன், அருண், சத்யா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அர்னவ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

2014ல் வெளியான சக்தி என்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் அர்னவ். இவர் சின்னத்திரை நடிகராகப் பிரபலமானதை விட அவன் குடும்ப பிரச்சனையில் தமிழ் மக்களிடையே அதிகம் அறியப்பட்டார். இந்த பிரச்சனைகளைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக வந்த இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

Bigg Boss Tamil: ஆண்கள் அணியை பழிதீர்த்த பெண் போட்டியாளர்கள்.. பிக்பாஸில் இன்று!

Bigg Boss Tamil Season 8: தமிழ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 8 தமிழ் கடந்த அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமான நிலையில் முதல் நாளிலே 24 மணி நேர எவிக்ஷன் என்ற புதுவித டாஸ்கை கொண்டுவந்து ரசிகர்களை அலறவைத்தனர். இதனைத் தொடர்ந்து சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில் பின் நான்கு நாட்களில் ரீஎன்ட்ரி கொடுத்து போட்டியாளர்களைப் பதறவைத்தார். எந்த சீசனிலும் இல்லாமல் புதுவிதமாக ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என தனித்தனி குழுக்களாக ஒரே விட்டிலில் பிரிக்கப்பட்டு எந்த சீசனிலும் இல்லாதவாறு சற்று புதுவிதமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் வார எவிக்ஷனில் ரவீந்தர் மற்றும் இரண்டாம் வார எவிக்ஷனில் அர்னவ் என அடுத்தடுத்த போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது வாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் அருணால் ஆண்கள் அணிக்கு வரும் சிக்கல்… பெண்கள் அணி கொடுத்த ட்விஸ்ட்!

இந்த வாரம் நடைப்பெற்ற ஸ்வாப்பில் ஆண்கள் அணியில் இருந்து ஜெஃப்ரி பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து சாச்சனா ஆண்கள் அணிக்கும் சென்றனர். அதனை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் பவித்ரா, சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா, முத்துகுமரன், அருண், சத்யா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

Bigg Boss Tamil Season 8: விறுவிறுப்பாக நகரும் பிக்பாஸ்… இந்த வார நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் யார்?

முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

Bigg Boss Tamil Season 8: அர்னவ் vs தர்ஷா.. இன்றைய பிக்பாஸில் காத்திருக்கும் ட்விஸ்ட்!

இதுவரை வெளியான எந்த சீசனிலும் இல்லாத மாதிரி இந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற விதத்தில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இரு குழுக்களாக ஒரே வீட்டில் இருக்கும் படி இந்த சீசன் 8ல் இருக்கிறது. இந்நிகழ்ச்சியை சீசன் 7 வரைக்கும் நடிகர் கமல் தொகுத்தநிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர் ஸ்டைலில் தொகுத்து வருகிறார்.இந்நிலையில் இரண்டாவது வாரமான இன்று யார் வெளியேறப் போகிறார் என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது.