WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு ஸ்டிக்கராக அனுப்ப வேண்டாம்.. வந்தது புதிய அப்டேட்!
Meta | இந்த ஸ்டிக்கர்ஸ் அம்சம் மூலம் ஒரு நபரின் முகம், உருவம், சிறிய வடிவிளான வீடியோ உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் சேட்டில் பகிர்ந்துக்கொள்ள முடியும். இந்த ஸ்டிக்கர்ஸ் அம்சம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உடனான உரையாடலை மேலும் சுவாரஸ்யமாக செய்கிறது.
மெட்டா நிறுவனத்தின் வாஸ்ட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் ஏராளமா மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தங்களது பயனர்களின் நலனுக்காக மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் அவ்வப்போது பல சிறப்பு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகயுள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அறிவிப்பு பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், தங்கள் நண்பர்களுடன் பொழுதுபோக்க சிறந்ததாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது. அதாவது வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களை ஒட்டுமொத்தமாக அனுப்பும் புதிய அம்சத்தை தான் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்த புதிய அம்சத்தின் சிறப்புகள் என்ன, இதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Starlink : இனி டவர்கள் தேவைப்படாது.. முழு வேகத்தில் நெட்வொர்க் கிடைக்கும்.. புதிய அம்சத்துடன் மாஸ் காட்டும் எலான் மஸ்க்!
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்துப்படும் வாட்ஸ்அப்
உலகம் முழுவதும் சுமார் 30 லட்சம் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதில் சுமார் 90 சதவீதம் மக்கள் பொழுதுபோக்கு, நண்பர்கள், குடும்பம் மற்றும் பணி சார்ந்த உரையாடல்களுக்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பணி இடங்களில் வாட்ஸ் அப் செயலி முக்கிய பங்கு வகிக்கிறது. பணி செய்யும் இடங்களில் வாட்ஸ்அப் செயலியில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் தகவல்கள் பரிமாரப்படுகிறது. இது பணி இடத்தில் ஊழியர்கள் ஒருவரை ஒருவர் எளிதாக தொடர்ப்புக்கொள்ள வழிவகை செய்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டு, செய்திகள் மற்றும் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. தற்போது அனைவரும் ஸ்மாட்ர்போன் மற்றும் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துவதால் பெற்றோர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கே பள்ளி நிர்வாகங்கள் தகவல்களை பரிமாறுகின்றனர்.
இதையும் படிங்க : WhatsApp : வாய்ஸ் நோட் “Transcription” அம்சத்தை அறிவித்த வாட்ஸ்அப்.. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன?
வாட்ஸ்அப் அறிவித்துள்ள புதிய அம்சம் என்ன?
வாட்ஸ்அப் செயலியில் மிகவும் சுலபமாக தகவல் பரிமாரப்படுவது மட்டுமன்றி, அது பொழுதுபோக்கிற்கு ஒரு சிறந்த செயலியாகவும் கருதப்படுகிறது. பயனர்கள் தங்கள் நண்பர்களை வைத்து குழு உருவாக்கி அதன் மூதல் வீடியோக்கள், ஆடியோக்கள், மீம்கள், வீடியோ கால்கள் என பல்வேறு வடிவங்களில் பொழுதுபோக்கு அம்சங்களை பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்றுதான் வாட்ஸ்அப் சேட்களில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்ஸ் அம்சம் ஆகும். இந்த ஸ்டிக்கர்ஸ் அம்சம் மூலம் ஒரு நபரின் முகம், உருவம், சிறிய வடிவிளான வீடியோ உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் சேட்டில் பகிர்ந்துக்கொள்ள முடியும். இந்த ஸ்டிக்கர்ஸ் அம்சம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உடனான உரையாடலை மேலும் சுவாரஸ்யமாக செய்கிறது. அந்த ஸ்வாரஸ்யத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் ஒரு சிறப்பு அம்சத்தை தான் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. அதாவது முன்னதாக தனித்தனியாக ஒவ்வொரு ஸ்டிக்கர்களாக அனுப்பி வந்த நிலையில், இனி வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் தொகுப்புகளை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Aadhaar : உங்கள் ஆதார் அட்டையை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?
ஸ்டிக்கர் தொகுப்பு அனுப்புவது எப்படி?
இதற்கு முதலில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ஸ்டோருக்கு செல்ல வேண்டும். அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். அதில் தோன்றும் ஷேர் ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் சேமித்து வைத்திருக்கும் ஸ்டிக்கர்களை தொகுப்பாக அனுப்ப முடியும். ஆனால் இதை செய்வதற்கு நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் Android 2.24.25.2-ன் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.