5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ration Card : ரேஷன் கார்டில் இறந்தவர் பெயரை நீக்க வேண்டுமா.. அலைய தேவையில்லை.. ஆன்லைனில் ஈசிய பண்ணிடலாம்!

Remove name in ration card | ரேஷன் அட்டைகளில் பொதுவாக குடும்ப தலைவரின் பெயர் இருக்கும். அதற்கு கீழ் மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவர்களின் பெயர் நீக்கப்பட்டு, புதிய ரேஷன் அட்டையில் சேர்க்கப்பட வேண்டும். அதாவது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய அட்டையில் சேர்க்கப்பட வேண்டும்.

Ration Card : ரேஷன் கார்டில் இறந்தவர் பெயரை நீக்க வேண்டுமா.. அலைய தேவையில்லை.. ஆன்லைனில் ஈசிய பண்ணிடலாம்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 20 Jul 2024 12:30 PM

ரேஷன் கார்டு : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டம் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன. அதன்படி குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை ரேஷன் கடைக்கு செல்லும்போதும் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். ரேஷன் கடைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் திருந்தங்கள் மற்றும் மாற்றங்களை எளிதாக மேற்கொள்ளலாம். தற்போது இறந்தவர்களின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து எப்படி நீக்குவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரேஷன் கார்டு

ரேஷன் அட்டைகளில் பொதுவாக குடும்ப தலைவரின் பெயர் இருக்கும். அதற்கு கீழ் மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவர்களின் பெயர் நீக்கப்பட்டு, புதிய ரேஷன் அட்டையில் சேர்க்கப்பட வேண்டும். அதாவது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய அட்டையில் சேர்க்கப்பட வேண்டும். ஏனெனில் திருமணம் ஆன பிறகு அவர்கள் வேறொரு குடும்பமாக கருதப்படுகிறார்கள்.

ரேஷர் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி?

பொதுவாக குடும்ப உறுப்பிபர்களுக்கு திருமணம் ஆகிவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ பெயர் நீக்கம் செய்யப்படும். இந்த நிலையில் ரேஷன் அட்டையில் இருந்து குடும்ப உறுப்பினர்களின் பெயரை நீக்க வேண்டும், அல்லது இணைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

இதையும் படிங்க : Aadhaar : ஆதார் முதல் ரேஷன் அட்டை வரை.. கடைசி தேதி இதுதான்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஆன்லைனில் சுலபமாக செய்து முடித்துவிடலாம்

இதற்கு முதலில் https:www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கான விருப்பத்தை தெரிவிக்கவும். அதன் பிறகு பெயர் நீக்கம் அல்லது பெயர் சேர்த்தல் குறித்த தகவலை தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் இணையத்தில் இணைக்க முடியும். இதற்கு ஆதாரமாக பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் அல்லது திருமண சான்றிதழ் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும். இதன் பிறகு உங்களுக்கு ஒரு எண் வழங்கப்படும். அதை வைத்து உங்கள் கோரிக்கையின் நிலை என்ன என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். இந்நிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பெயர் நீக்கம் அல்லது சேர்ப்பு செய்யபப்டும்.

Latest News