5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadhaar & PAN : வாட்ஸ்அப்பில் ஆதார் மற்றும் பான் கார்டு டவுன்லோட் பண்ணலாமா.. அட இது தெரியாம போச்சே!

Download | பான் கார்டு, ஆதார் கார்டுகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசின் இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் சுலபமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஆனால் வாட்ஸ்அப்  மூலம் ஆதார் மற்றும் பான் கார்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Aadhaar & PAN : வாட்ஸ்அப்பில் ஆதார் மற்றும் பான் கார்டு டவுன்லோட் பண்ணலாமா.. அட இது தெரியாம போச்சே!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 09 Aug 2024 16:53 PM

ஆதார் மற்றும் பான் : இந்தியர்களின் பிரதான அடையாள அட்டையாக ஆதார் கார்டு உள்ளது. அதன்படி இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு சேர்ப்பது முதல், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வரை ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற ஒரு முக்கிய ஆவணம் தான் பான் கார்டு. பான் கார்டுன் இல்லை என்றால் வங்கி சார்ந்த எந்த வேலைகளையும் செய்ய முடியும். தனிநபர் அடையாளத்திற்கு எப்படி ஆதார் கார்டோ அதேபோல நிதி, பண பரிவர்த்தனை உள்ளிட்ட விவகாரங்களுக்கு பான் கார்டு கட்டாயமாகும். பான் கார்டு, ஆதார் கார்டுகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசின் இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் சுலபமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஆனால் வாட்ஸ்அப்  மூலம் ஆதார் மற்றும் பான் கார்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதான் வாட்ஸ்அப்பிலும் ஆதார் மற்றும் பான் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Whatsapp : இனி இந்த மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.. முக்கிய அறிவிப்பு!

வாட்ஸ்அப்பில் ஆதார் மற்றும் பான் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஆதார் மற்றும் பான் கார்டை வாட்ஸ்அப்பில் பதிவிறக்கம் செய்வற்கு முன்னதாக “My Gov” வாட்ஸ்அப் உதவி எண்ணை மொபைலில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்படி 9013151515 என்ற இந்த எண்ணை மொபைல் போனில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பதிவு செய்யப்பட்ட இந்த மொபைல் எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் Hi என மெசேஜ் அனுப்புங்கள். உங்களின் மெசேஜ் சென்று சேர்ந்ததும், உங்களுக்கு ஆட்டோமேட்டிக் மெசேஜ் ஒன்று அனுப்பப்படும். அந்தெ மேசேஜின் இறுதியில் உங்களுக்கு இரண்டு சேவைகள் வழங்கப்படும். அதில் DigiLocker Service என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதற்கு பிறகு மொபைல் எண் உள்ளிட்ட சில தகவல்கள் கேட்கப்படும். அவற்றை பதிவு செய்து பிறகு பிறகு உங்களின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி அனுப்பப்படும். அந்த ஒடிபியை பதிவு செய்து நீங்கள், உங்கள் டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டு வைத்துள்ள ஆதார் அல்லது பான் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : BSNL Recharge Plan: 18 ரூபாய் இருந்தாலே போதும்… பிஎஸ்என்எல் வழங்கும் சூப்பரான ரீசார்ஜ் பிளான்.. மிஸ் பண்ணாதீங்க!

மற்ற சில சிறப்பு அம்சங்கள்

இந்த முறையை பின்பற்றி ஆதார், பான் மற்றுமன்றி மதிப்பெண் சான்றிதழ், ஓட்டுநர் உள்ளிட்ட ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். டிஜிலாக்கர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இதில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News