5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Whatsapp : இனி இந்த மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.. முக்கிய அறிவிப்பு!

Smartphone | சில பழைய ஆண்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வாட்ஸ்அப் பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப்பில் இருக்கும் முக்கிய விவரங்களைம் பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளுமாறும் கூறப்படுகிறது.

Whatsapp : இனி இந்த மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.. முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 06 Aug 2024 17:45 PM

வாட்ஸஅப் செயலி : சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை தகவலை பரிமாறிக்கொள்ள அனைத்து துறைகளும் இந்த செயலியை பயன்படுத்துகின்றன. மற்ற சமூக ஊடகங்களை காட்டிலும் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம். தங்களின் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது சில அப்டேட்டுகளை வெளியிடும். ஆனால் இந்த முறை வாட்ஸ்அப் செயலி குறித்து ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப்பின் அதிரடி நடவடிக்கை

சில பழைய ஆண்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வாட்ஸ்அப் பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப்பில் இருக்கும் முக்கிய விவரங்களைம் பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளுமாறும் கூறப்படுகிறது. இப்போது எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு வாட்ஸ் அப் சேவையை நிறுத்த உள்ளது என்பதை பார்க்கலாம்.

இதையும் படிங்க : Whatsapp : இனி புகைப்படங்கள் , வீடியோக்களை ஷேர் செய்ய நெட்வொர்க் தேவையில்லை.. வாட்ஸ்அப்பின் அசத்தல் அம்சம்!

இந்த வகை ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் செயல்படாது

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு பல அப்டேட்டுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, பழை ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் சேவையை நிறுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது 4.0-க்கு முந்தைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் 11-க்கு முந்தைய iOS ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

எந்த எந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படும்

வாட்ஸ்அப் செயலி தற்போது முதல் 5.0-க்கு மேல் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் 11 அல்லது அதற்கு மேல் உள்ள iOS ஸ்மார்ட்போன்களில் இயங்கும். எனவே பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால் மேற்கண்ட செயலிகளை வைத்திருக்க வேண்டும். எந்த எந்த ஸ்மார்ட்போன்கள் இதில் பாதிக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிக்காவிட்டாலும், சாம்சங்க், ஆப்பிள், மோட்டோரோலா, சோனி, எல்.ஜி உள்ளிட்ட 35 நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Meta AI : வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ.. வீட்டுப்பாடம் முதல் ஆராய்ச்சி வரை.. மாணவர்களுக்கான சூப்பர் பலன்கள்!

இதன் மூலம் சில குறிப்பிட்ட வகையை சேர்ந்த ஸ்மார்ட்போன் பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. வாட்ஸ்அப் பயன்படுத்த விரும்புவோர் தங்கள் ஸ்மார்ட்போன்களை, புதிய மாடம் ஸ்மார்ட்போன்களாக அப்டேட் செய்வது தான் இதற்கு ஒரே தீர்வு.

Latest News