5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Whatsapp Update : வாட்ஸ்அப்பின் அசத்தலான புதிய அம்சம் .. இனி நோட் பண்ண வேண்டிய அவசியமில்லை!

New Update | மற்ற சமூக ஊடகங்களை காட்டிலும் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம். தங்களின் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது சில அப்டேட்டுகளை வெளியிடும். அந்த வகையில் தற்போது ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Whatsapp Update : வாட்ஸ்அப்பின் அசத்தலான புதிய அம்சம் .. இனி நோட் பண்ண வேண்டிய அவசியமில்லை!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 23 Aug 2024 12:42 PM

வாட்ஸஅப் புதிய அப்டேட் : சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை தகவலை பரிமாறிக்கொள்ள அனைத்து துறைகளும் இந்த செயலியை பயன்படுத்துகின்றன. மற்ற சமூக ஊடகங்களை காட்டிலும் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம். தங்களின் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது சில அப்டேட்டுகளை வெளியிடும். அந்த வகையில் தற்போது ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்ன அப்டேட், அதன் சிறப்பு அம்சம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Instagram: இன்ஸ்டாகிராமில் சூப்பர் அப்டேட்.. இனி இன்னும் களைகட்டப்போகுது!

வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் அறிமுகம்

வாட்ஸ் அப் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த புதிய அம்சம் தான் அது. அதாவது வாய்ஸ் மேசேஜ்களை, குறுஞ்செய்தியாக மாற்றும் புதிய அம்சத்தை தான் வாட்ஸ்அப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக பயனர்கள் வேறு ஒரு செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை, குறுஞ்செய்திகளாக மாற்றி பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப்பிலே அந்த புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மூகல் வாய்ச் நோட்டில் கூறப்பட்டுள்ள தகவலை நோட் செய்யவோ அல்லது குறுஞ்செய்தியாக கன்வர்ட் செய்யவோ வேண்டியதில்லை. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அப்டேட் பல்வேறு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட் மூலம் வாய்ஸ் மெசேஜ்களை ஆங்கிலத்தில் மட்டுமன்றி இந்தியிலும் கன்வர்ட் செய்துக்கொள்ளலாம். இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரிப்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?

  1. வாட்ஸ்அப் வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரிப்டை ஆக்டிவேட் செய்வதற்கு முதலில் செட்டிங்ஸ்குக்கு செல்ல வேண்டும்.
  2. அதில் Chat என்பதை கிளிக் செய்தால் உங்களுக்குன் வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரிப்டை ஆக்டிவேட் செய்வதற்கான் ஆப்ஷன் காட்டும்.
  3. அதை ஆக்டிவேட் செய்த பிறகு உங்களது வாய்ஸ் மெசேஜின் கீழ், வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரிப்ட் பிராம்ப்ட் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Aadhaar & PAN : வாட்ஸ்அப்பில் ஆதார் மற்றும் பான் கார்டு டவுன்லோட் பண்ணலாமா.. அட இது தெரியாம போச்சே!

இந்த புதிய அம்சத்தை மொபைல் போனில் மட்டுமே பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப் வெப்பில் பயனபடுத்த முடியாது. இந்த புதிய அம்சம் 5 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆங்கிலம், ஸ்பேனிஷ், போர்துகீசியம், ரஷ்யன் மற்றும் இந்தி உள்ளிட்டவை ஆகும். பயனர்கள் இந்த 5 மொழிகளில் வாய்ச் மெசேஜை டிரான்ஸ்கிரிப்ட் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News