Jio Prepaid Plan : வெறும் ரூ.173-க்கு அன்லிமிடெட் பிளான் வழங்கும் ஜியோ.. இதுதான் பெஸ்ட்!
Ultimate Plan | இழந்த தங்களின் பயனர்களை தன்வசம் திருப்பும் விதமாக, பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஜியோ நிறுவனமும் பல சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரூ.173-க்கும் ஜியோ வழங்கும் அன்லிமிடெட் பிளான் குறித்து பார்க்கலாம்.
ஜியோவின் புதிய பிளான் : சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜியோ நிறுவனம் ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி, 5ஜி சேவையை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த பயனர்களை இது கோபமூட்டும் விதமாக அமைந்தது. இதன் காரணமாக ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை, அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-க்கு மாற்ற தொடங்கினர். இந்நிலையில் இழந்த தங்களின் பயனர்களை தன்வசம் திருப்பும் விதமாக, பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஜியோ நிறுவனமும் பல சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரூ.173-க்கும் ஜியோ வழங்கும் அன்லிமிடெட் பிளான் குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : Mobile Listening : உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் மொபைல் போன்கள்.. உறுதி செய்த நிறுவனம்.. அதிர்ச்சி தகவல்!
ரூ.173-க்கு ப்ரீ பெய்டு ரீச்சார்ஜ் திட்டம் வழங்கும் ஜியோ – எப்படி தெரியுமா?
ஜியோ நிறுவனம் 336 நாட்களுக்கான ரீச்சர்ஜ் பிளானை செயல்படுத்தி வருகிறது. இந்த பிளானுக்கு ரூ.1899 கட்டணம் விதிக்கப்படும் நிலையில், ஒரு மாதத்திற்கு கணக்கிட்டு பார்த்தால் வெறும் ரூ.173 மட்டுமே ஆகும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஜியோவின் இந்த பிளான் விலை குறைந்ததாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் பெறலாம். இந்த திட்டத்தில் 24ஜிபி அதி வேக டேட்டா வழங்கப்ப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா பயன்பாட்டிற்கான வரையறை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் 3600 இலவச மெசேஜ் அம்சமும் உள்ளது. மற்ற பிளான்களில் தினமும் 100 இலவச மெசேஜ் அம்சம் உள்ள நிலையில், இதில் மொத்தமாக 3600 இலவச மெசேஜ் அம்சம் இடம் பெற்றுள்ளது.’
இதையும் படிங்க : Budget Smartphones : Vivo T3X முதல் Moto G64 வரை.. செப்டம்பர் மாதம் வாங்க கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனகள்.. அதுவும் வெறும் ரூ.15,000-க்குள்!
பொழுதுபோக்கு அம்சங்களையும் வாரி வழங்கும் ஜியோ
டேட்டா, போன் கால்கள், மெசேஜ் மட்டுமன்றி இந்த திட்டம் மூலம் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் உள்ளிட்ட சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஜியோவின் ரூ.189-க்கான பிளான்
இதேபோல ரூ.200-க்கு கீழும் ஜியோவில் ப்ரீ பெய்டு பிளான் உள்ளது. ரூ.189-க்கு வழங்கப்படும் பிளான் தான் அது. இந்த பிளானில் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் போன் கால்ஸ் மற்றும் 300 இலவச மெசேஜ் அம்சத்தை வழங்குவது குறிப்பிடத்தக்கது.